- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி என்னை கூப்பிட்டு வெச்சு அவமானப்படுத்திட்டாங்களே? - என்னோட ரேஞ்ச் என்னன்னு இவங்களுக்கு தெரியாதா-...

இப்படி என்னை கூப்பிட்டு வெச்சு அவமானப்படுத்திட்டாங்களே? – என்னோட ரேஞ்ச் என்னன்னு இவங்களுக்கு தெரியாதா- புலம்பித் தீர்த்த நயன்தாரா

- Advertisement -

நடிகை நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டப்பெயர் தமிழ் சினிமாவில் தரப்பட்டுள்ளது. ஆனால் அவரே அந்த பட்டப்பெயர் தனக்கு வேண்டாம்.என்று அன்னபூரணி பிரமோ நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டார். ஏனென்றால் அப்படி சொன்னால், 10 பேர் பாராட்டுகின்றனர். ஆனால் 50 பேர் திட்டுகின்றனர் என்றார்.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகைகளுக்கு கூட, திருமணமாகி விட்டால் மார்க்கெட் சரசர என சரிந்துவிடும். குழந்தைகளுக்கு தாயாகி விட்டால், அடுத்து சீரியல் பக்கமாக தான் ஒதுங்க வேண்டும். அப்படிதான் பல முன்னாள் நாயகிகள், டிவி சீரியல்களில் அழுதுகொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் இது நயன்தாரா விஷயத்தில் நேர்மாறாக இருக்கிறது. ஒருவேளை வாடகைத்தாய் மூலம் இரட்டை பிள்ளைகள் பெற்றதால் அவரை என்றும் இளமை நாயகியாகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள் போலும். திருமணமாகி, குழந்தைகளுக்கு தாயான பிறகும் மார்க்கெட் சரியாததால், ரூ. 12 கோடியாக சம்பளத்தை உயர்த்தினார்.

ஆனால் இப்போது நிலைமை சரியில்லை என்றுதான் கூறப்படுகிறது. ஷாருக்கான் உடன் ஜவான் படத்தில் நடித்த பிறகு, பாலிவுட்டில் தனக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி வரும் என எதிர்பார்த்தார். யாரும் அழைக்கவில்லை. ஜவான் படத்தை இயக்கிய அட்லி கூட இனி தனது அடுத்த படத்துக்கு நயன்தாராவை அழைப்பாரா என்பது சந்தேகம்தான். அன்னபூரணியும் ஊத்திக்கொண்டது.

- Advertisement -

இந்நிலையில், கருணாநிதி 100 விழாவில் பங்கேற்க நயன்தாரா வந்தார். கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, விழா நடக்கும் மேடை பகுதிக்கு செல்ல அதிக தூரம் என்பதால், பேட்டரி காரில் வந்த நடிகர், நடிகையர் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜெயம் ரவி, யோகி பாபு என பலரும் அப்படிதான் சென்றனர்.

அப்போது அங்கு வந்த நயன்தாராவும் அந்த பேட்டரி காரில் ஏறிச்செல்ல அறிவுறுத்தப்பட்டார். அந்த பேட்டரி காரில் ஏற்கனவே 2, 3 பேர் இருந்தனர். அவர்களுடன் உட்கார்ந்து பயணிக்க வேண்டிய சூழலில் நயன்தாரா, பயங்கர அப்செட் ஆனார். 50 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு கணவர் விக்கியுடன் பறப்பவர் நயன்தாரா. இப்படி கூப்பிட்டு வெச்சு, அவமானப்படுத்தி விட்டார்களே என விழாக்குழுவினர் மீது பயங்கர அப்செட்டில் நயன்தாரா இருந்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்