- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகராக மாறிய விஜயகாந்த் பட இயக்குனர்… அதற்குள் இத்தனை படங்களில் நடிச்சுட்டாரா? அடேங்கப்பா… அடுத்து அந்த...

நடிகராக மாறிய விஜயகாந்த் பட இயக்குனர்… அதற்குள் இத்தனை படங்களில் நடிச்சுட்டாரா? அடேங்கப்பா… அடுத்து அந்த கேரக்டரில் நடிக்கப் போறாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்கள் இயக்குனராக மாறுவதும் இயக்குனர்கள் நடிகராக மாறுவதும் சகஜமாக நடந்துக்கொண்டிருக்கிற ஒரு விஷயம்தான். அந்த வகையில் இயக்குனர்கள் பாரதிராஜா மணிவண்ணன் மகேந்திரன் மனோபாலா சுந்தர் சி ஆர் சுந்தர்ராஜன் கே பாக்யராஜ் பாண்டியராஜன் பார்த்திபன் என பலபேரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இயக்குனர்கள் நடிகர்களாக ஜெயித்த அளவுக்கு நடிகர்களாக இருந்துவிட்டு இயக்குனர்களாக பெரிய அளவில் ஜெயித்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவுதான். ஏனெனில் இயக்குனர்கள் பலரையும் நடிக்க வைத்த அனுபவம் கொண்டவர்களாக இருப்பதால் எளிதில் அவர்களால் நல்ல நடிகர்களாக தங்களை நிரூபிக்க முடியும். நடிகர்கள் இயக்குனர்களாகும் போது அது சாத்தியமாவது இல்லை.

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தை இயக்கியவர் ஆர்வி உதயகுமார். அடுத்து கமல்ஹாசன் நடித்த சிங்காரவேலன் கார்த்திக் நடித்த கிழக்கு வாசல் பொன்னுமணி ரஜினிகாந்த் நடித்த எஜமான் பிரபு நடித்த ராஜகுமாரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கு ஆர்வி உதயகுமார் தந்திருக்கிறார்.

இயக்குனர் ஆர்வி உதயகுமார் இப்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராகவும் இருக்கிறார். சமீபகாலமாக ஆர்வி உதயகுமார் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பிஸியான ஒரு நடிகராகவும் அவர் மாறிவிட்டார். இப்போது அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 50 நெருங்கப் போவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இயக்குனராக இருந்த ஆர்வி உதயகுமார் நடிகராக அவதாரம் எடுத்தது குறித்து கூறியதாவது, நான் இயக்கிய சின்ன கவுண்டர் எஜமான் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த பின்னர் பிரபுதேவா நடித்த தேவி படத்தின் மூலம் நடிகராக ரீ என்ட்ரி ஆனேன். தனுஷ் நடித்த தொடரி படத்தில் எனக்கு நல்ல ரோல் அமைந்தது. அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறேன். குறிப்பாக சூரி நடித்த கருடன் படத்தில் நான் அமைச்சராக நடித்தது நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

அடுத்து இன்னொரு படத்தில் முதல்வராக நடித்து இருக்கிறேன். இப்போது நடிகர் பிரபு நடிக்கும் ராஜபுத்திரன் படத்தில் ஒரு வித்யாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். தாதா மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர் அது. இந்த படங்களை தவிர எழில் இயக்கும் தேசிங்கு ராஜா 2 மற்றும் ரெட் லேபிள் உட்பட பல படங்களில் நடித்து வருகிறேன். அதுகுறித்த அறிவிப்பு முறைப்படி வெளியாகும். இயக்குனராக பல வெற்றிப் பாடங்களை கொடுத்தது போல எனக்கு நடிப்பும் நிறைவாக இருக்கிறது என்று இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்வி உதயகுமார் மகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்