- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால், வெளியே வந்த பின் செய்த அந்த விஷயம்...

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால், வெளியே வந்த பின் செய்த அந்த விஷயம் – செமையா பெர்பாமென்ட்ஸ் பண்றீங்க ப்ரோ

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேமுதிக கட்சித் தலைவர், தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் என்ற பல அடையாளங்கள் நடிகர் விஜயகாந்துக்கு உண்டு. குறிப்பாக, ரசிகர்களும் தொண்டர்களுக்கும் அவரை கேப்டன் என்றுதான் அவர் மறைந்த பின்பும் அழைக்க பிடிக்கிறது.

கடந்த மாதம் 28ம் தேதி, கேப்டன் சென்னையில் காலமானார். அப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்ற நடிகர்கள் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் ஸ்டாலின் கேப்டனின் இறுதி சடங்கிலும் கலந்துக்கொண்டார். கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் திரண்டனர்.

- Advertisement -

ஆனால் 2024 புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அப்போது வெளிநாடு சென்றிருந்த சில நடிகர், நடிகையர் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வரவில்லை. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக உள்ள நடிகர் விஷால், விஜயகாந்த் மறைவுக்கு தன்னால் நேரில் வரமுடியவில்லை என வீடியோ பதிவிட்டு வருத்தம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது சென்னை திரும்பியுள்ள நடிகர் விஷால், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது விஷாலின் மிக நெருங்கிய நண்பரான நடிகர் ஆர்யா உடன் இருந்தார்.

- Advertisement -

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், கேப்டனின் மறைவுக்கு நான் நேரில் வர முடியாமல் போனது துரதிஷ்டமானது. நடிகர் சங்கம் சார்பில், கேப்டனுக்கு கண்டிப்பாக இறுதி அஞ்சலி நடத்தியிருக்க வேண்டும். வரும் 19ம் தேதி கேப்டனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கல் கூட்டம் நடத்தப்படும்.

வாழ்கிற போதே பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்க யாரும் மறுக்க மாட்டார்கள். அதுகுறித்து பரிசீலனை செய்யப்பட்டு, நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்கப்படும், என்று விஷால் தெரிவித்துள்ளார். அதன்பின், நினைவிடத்துக்கு வெளியே வந்த விஷால், ஆர்யா இருவரும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர். கேப்டன் மறைவுக்கு வராத தன்னை பற்றிய விமர்சனத்துக்கு, அன்னதானம் வழங்கி அந்த புகாரை சமாளித்துள்ளார் விஷால்.

- Advertisement -

சற்று முன்