- Advertisement -
Homeபொழுதுபோக்குகுப்பை அள்ள வர்றவங்களை நல்லவங்க கெட்டவங்கன்னு ஏன் பிரிக்கறீங்க? அரசியல் கேள்விக்கு அதிரடி பதில் சொன்ன...

குப்பை அள்ள வர்றவங்களை நல்லவங்க கெட்டவங்கன்னு ஏன் பிரிக்கறீங்க? அரசியல் கேள்விக்கு அதிரடி பதில் சொன்ன நடிகர் விஜய் ஆண்டனி – இது வேற லெவல் கிண்டலா தெரியுதே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிறகு நான் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் ஆண்டனி தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஒரு கலைஞனாக தமிழ்ச சினிமாவில் வலம் வருகிறார்.

சமீபத்தில் அவரது படம் சக்தி திருமகன் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. தொடர்ந்து சக்தி திருமகன் பிரமோசன் நிகழ்ச்சிகளில் விஜய் ஆண்டனி பங்கேற்று வருகிறார். மேலும் அவரது இசைக்கச்சேரிகளும் சமீபகாலமாக தொடர்ந்து நடந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் கோவையில் நடந்த சக்தி திருமகன் படம் பிரமோசன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, அரசியல் களத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒபீனியன் இருக்கும். எல்லா கட்சிகளுமே நல்லா தான் நடந்துக்கொண்டு இருக்கின்றன. மக்களுக்கு சேவை செய்யணும், தேர்தலில் ஜெயிச்சு மக்களுக்கு நல்லது பண்ணனும் என்ற எண்ணம் எல்லா கட்சிக்காரங்க கிட்டேயும் இருக்குது. நான் அப்படிதான் நினைக்கிறேன்.

அரசியல் கட்சிகளை எல்லாம் ஏன் போட்டியாளர்களாக பார்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியலே. ஒரு ஏரியாவுல குப்பையா சிந்திக் கிடக்கு. அதை அள்ளறதுக்காகவும் சுத்தம் செய்றதுக்காக 10 பேர் வர்றாங்க என்கிற போது அவர்களுக்குள் எதற்கு எதிர்ப்பு போட்டி, எதற்காக ஒருவரை ஒருவர் உயர்த்தி தாழ்த்தி பேசிக்கணும்?

- Advertisement -

இவர்தான் அள்ளணும், அவர்தான் அள்ளணும் என்று ஏன் பிரிச்சு பேசணும்? அரசியலுக்கு வருகிற அரசியலில் இருக்கிற எல்லோருமே மக்களுக்கு நல்லது பண்ணனும் என்கிற ஆர்வத்தில் வருவதால் எல்லா கட்சிகளையும் நான் உயர்வாக தான் பார்க்கிறேன். யாராக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யதான் வர்றாங்க.

மக்களுக்கு சேவை செய்ய வர்றவங்களை இவர் நல்லவர் இவர் கெட்டவர் என்று பிரிச்சு பார்க்க வேண்டியது இல்லை. அதனால் மக்கள் சேவைக்காக வருகிற எல்லோரையும் நான் வாழ்த்துகிறேன் சந்தோஷம் என்று நடிகர் விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். கடைசியில் அரசியல்வாதிகளை குப்பை அள்ளுகிற லிஸ்ட்டுல கொண்டு வந்துட்டாரே, இதை விட யாராலும் கலாய்க்க முடியாது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்