- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பத்திலேயே விஜய் போட்ட கண்டிஷன், கோட்டை விட்ட வெங்கட்பிரபு, ரணகளமாக மாறிய ஷூட்டிங் ஸ்பாட் -...

ஆரம்பத்திலேயே விஜய் போட்ட கண்டிஷன், கோட்டை விட்ட வெங்கட்பிரபு, ரணகளமாக மாறிய ஷூட்டிங் ஸ்பாட் – எந்நேரமும் பீதியில் கோட் படக்குழு

- Advertisement -

இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் இரண்டு மகன்களில் ஒருவர் இயக்குநர் வெங்கட்பிரபு. மற்றொருவர் பிரேம்ஜி. இருவருமே நடிகர்கள்தான். ஆனால் வெங்கட்பிரபு, படங்களில் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஜாலியாக படங்களை எடுப்பதில் இவர் பெயர் பெற்றவர்.

வெங்கட்பிரபுவுக்கு நண்பர் கூட்டம் அதிகம். அதனால் அவரது படங்களில் அவரது நெருங்கிய நண்பர்கள்தான் நடிப்பார்கள். அதனால் ஷூட்டிங் ஸ்பாட் எப்போதும் கலகலப்பாக, ஜாலியாக இருக்கும். வெங்கட்பிரபு படப்பிடிப்பு என்றாலே, ஏதோ பிக்னிக் சென்று வருவது போலதான் படப்பிடிப்பு குழுவினருக்கும், நடிகர் நடிகைகளுக்கும் தோன்றும்.

- Advertisement -

இப்போது விஜய் நடிப்பில் கோட் ( கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்) படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் வழக்கமான வெங்கட்பிரபு மிஸ்ஸிங் என்கின்றனர். எப்போதும் சிரித்தபடி காணப்படும் வெங்கட்பிரபு, இப்போது டென்சனாகவும், கோபமாகவும் இருப்பதோடு உதவி இயக்குநர்களை கண்டபடி திட்டுவது அதிகரித்து விட்டது.

இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய்தான். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த லியோ படப்பிடிப்பின் போது, படம் குறித்த பல விஷயங்கள் லீக் ஆகி சோஷியல் மீடியாவில் அடிக்கடி வைரலாகி கொண்டே இருந்தன. அதுவே படத்துக்கு ஒரு கட்டத்தில் எதிர்மறைாக மாறி, படம் குறித்த பார்வையை வேறு மாதிரியாக மாற்றிவிட்டது. லியோவும், அதில் நடித்த விஜயும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

- Advertisement -

அதனால் இந்த படம் குறித்து பேசும் போதே துவக்கத்தில், இதுபற்றி தெளிவாக பேசி இருக்கிறார் விஜய். லியோ படம் போல், இந்த படம் பற்றிய விஷயங்கள் எதுவுமே வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது படம் பற்றிய எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் வேறு மாதிரியாக உருவாக்கும். அதுவே, படத்துக்கு பாதிப்பை தரும். லியோ படத்தில் அப்படித்தான் ஆனது என்றும் வெங்கட்பிரபுவிடம் கண்டிசனாக சொல்லி இருக்கிறார்.

ஆனால் வெங்கட்பிரபு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், படத்தின் கதை, அது ஜெமினிமேன் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல், இறுதியாக படத்தின் பெயர், விஜய் ரோல் என சகல விஷயங்களுமே சோஷியல் மீடியாவில் லீக் ஆகி விட்டதால், வெங்கட்பிரபு மீது கடும் கோபத்தில் இருக்கிறார் விஜய். அதனால், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் சிலரால்தான் இந்த விஷயங்கள் வெளியே போகிறது என, உதவி இயக்குநர்கள் மீது கோபத்தை காட்டி வருகிறார் வெங்கட்பிரபு. அதனால், பீதியில் தவிக்கிறது கோட் படக்குழு.

- Advertisement -

சற்று முன்