நடிகர் அஜீத்குமார் கடந்த 3 மாதங்களாக அஜர்பைஜான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார். அஜர்பைஜானில் ஹூட்டிங் நடந்தது. இப்போது பிரேக்கப் விடப்பட்ட நிலையில், அஜீத்குமார் மற்றும் விடாமுயற்சி படக்குழு உட்பட அனைவரும் சென்னையில்தான் இருக்கின்றனர்.
அஜர்பைஜானில் பிப்ரவரி மாதம் இறுதி வரை கால்ஷீட் தந்துள்ள அஜீத்குமார், அதன்பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஆனால் 50 சதவீதம் மட்டுமே விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மீதி படப்பிடிப்பை முடித்தாக வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் இருந்தும் இன்னும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஜீத்குமார் அஞ்சலி செலுத்தவில்லை. விஜயகாந்த் இல்லத்துக்குச் சென்று துக்கம் விசாரிக்கவும் இல்லை. சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவிலும் கலந்துக்கொள்ளவில்லை. இது தமிழ் சினிமாவினர் மத்தியில் பயங்கரமான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதாவது, அஜீத்குமார் இந்த விழாவில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் நிச்சயமாக இந்த விழாவுக்கு வரமாட்டார் என்று தெரிந்தும் ஒரு மரியாதைக்காக அவருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் தரப்பட்டது.
அஜீத்குமார் ஒருமுறை, கருணாநிதி பங்கேற்க விழாவிலேயே அநாகரிகமாக பேசியவர். என்னை கட்டாயப்படுத்தறாங்க, வற்புறுத்தறாங்க என்று சொன்னவர். அதனால் இந்த விழாவுக்கும் அவர் வரமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். முறைப்படி அழைக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் தரப்பட்டது. ஏனென்றால், விழா நடந்த பின்னால் அழைப்பிதழ் நேரில் தந்திருந்தால் வந்திருப்பேன் என்று அவர் கூறிவிடக் கூடாது.
அந்த விழாவுக்கு வராமல் விட்டது அவரது பழக்கம். அனைவருக்கும் தரப்பட்டதால்தான் அவருக்கும் தரப்பட்டது. அவர் வராததால் விழாவுக்கு 50 ஆயிரம் பேர் வராமல் போய்விட்டார்களா, அவர் வராதது எல்லாம் ஒரு பெரிய பிரச்னை இல்லை. அதனால் விழாவின் சிறப்பு எதுவும் பாதிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் கே ராஜன்.





