- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் அரசியலுக்கு சென்றுவிட்டால், அந்த இடத்துக்கு வரப் போகிறவர் யார்? அட இப்பவே ஆரம்பிச்சுட்டீங்களா? -...

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டால், அந்த இடத்துக்கு வரப் போகிறவர் யார்? அட இப்பவே ஆரம்பிச்சுட்டீங்களா? – கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது நடித்துவரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்கு பிறகு, சினிமா நடிப்புக்கு தற்காலிகமாக புல் ஸ்டாப் வைத்துவிடுவார். அதன்பிறகு அரசியலில் முழுநேரத்தை செலவளிக்க நேர்ந்தால் அவர் சினிமாவில் நடிப்பதும் கேள்விக்குறிதான்.

விஜய் மக்கள் இயக்கத்தை அப்படியே அரசியல் அமைப்பாக மாற்றிவிடும் வகையில், நிர்வாக ரீதியான பணிகளை அதன் தலைவராக உள்ள புஸ்லி ஆனந்த் செய்து வருகிறார். ஆனால் சினிமாவை ரசிக்கும் அளவுக்கு, அரசியலில் விஜயை மக்கள் ரசித்து ஏற்று ஓட்டு போடுவார்களா என்பதும் குழப்பத்தையே தருகிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி விஜயை பொருத்தவரை அவர் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டாலும் தொகுதி வாரியாக வேட்பாளர்களாக நிறுத்தப்படுவது, இப்போதைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளாக தான் இருக்கப் போகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் மத்தியில் அப்படி பிரபல நிர்வாகிகளாக இதுவரை யாருமே வளரவில்லை. மக்கள் மத்தியில் பரிச்சயமும் இல்லை. இப்போதைக்கு புஸ்லி ஆனந்த் ஒருவர் மட்டுமே அடையாளமாக தெரிகிறார்.

விஜய் தனித்து போட்டியிடாமல் உதிரி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டால், ஓட்டுக்காக கூட்டணி சேரும் தேர்தல் நேர அரசியல்வாதியாக பார்க்கப்பட்டு, அதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும். மக்கள் நீதிமய்யம் கட்சியை துவங்கிய கமல்ஹாசன், யாருடைய ஆதரவும் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, ஆதரவற்ற நிலையில் தவித்து நிற்கிறார்.

- Advertisement -

விஜயை பொறுத்தவரை முதல் வீச்சிலேயே நமது வெற்றிக்கனி கண்ணுக்கு தெரிய வேண்டும். ஆட்சிக்கு வந்துவிட்டால் எம்ஜிஆர், ஜெயலலிதா போல அசைக்க முடியாத சக்தியாக தமிழக அரசியல் மாற வேண்டும். இறுதி வரை நம் ராஜ்ஜியம்தான் தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். ஆனால் முழுநேர அரசியல்வாதி ஆன பின்பு நடிக்க விஜயும் விரும்ப மாட்டார். அவர் நடிப்பதை மக்களும் விரும்ப மாட்டார்கள்.

இந்த சூழலில் விஜய் அரசியல்வாதியாகி விட்டால் அந்த இடத்தை பிடிக்கப் போவது சிவகார்த்திகேயனா, சூர்யாவா, தனுஷா, சிம்புவா என்ற பட்டிமன்றம் இப்போதே துவங்கி விட்டது. இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதுக்குள் இப்படி ஒரு அலப்பறையை கிளப்பறாங்களே, என விஜய் ரசிகர்கள் பயங்கர டென்சனில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்