- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிப்பட இயக்குநர்களை முடக்கி போடும் பிரபல நடிகர்கள், இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா -...

வெற்றிப்பட இயக்குநர்களை முடக்கி போடும் பிரபல நடிகர்கள், இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா – இனியாவது திருந்துவார்களா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதும் ஓடுகிற குதிரைகள் தான் பணம் கட்டுவார்கள். ஏனென்றால், நூற்றுக்கணக்கான கோடிகளில் பணம் கொட்டும் தமிழ் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால், ஜெயிப்பவர்களுடன் சேர வேண்டும் என்பது எழுதப்படாத நீதியாக, நியதியாக இருப்பதுதான் அதற்கு காரணம்.

சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தபின் இயக்குநர்களாக சிலர் படம் இயக்குகின்றனர். சிலர் நேரடியாக இயக்குநராக களத்துக்கு வந்துவிடுகின்றனர். இதிலும் யாராக இருந்தாலும் வெற்றி பெற்றுவிட்டால், அவர்களுக்கு தனி மரியாதை கோலிவுட்டில் கிடைத்து விடுகிறது.

- Advertisement -

அப்படி முதல் படத்திலேயே ஜெயித்தவர்களை, உடனடியாக பெரிய ஸ்டார் நடிகர்கள் தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்து விடுகின்றனர். ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக கெொடுத்து, அவர்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விடுகின்றனர். அதன்பின் ஆறு மாதமோ, ஒரு வருடமோ, 2 ஆண்டுகள் வரை கூட அவர்களை அடுத்த படத்தை இயக்க விடாமல் முடக்கி போடும் நடிகர்கள் உள்ளனர்.

இப்படி நடிகர் சூர்யா, அயலான் பட இயக்குநரை 2 ஆண்டுகளாக காத்திருக்க வைத்திருக்கிறார். ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருகனை, ஜப்பான் படம் எடுக்க 2 ஆண்டுகள் காத்திருக்க வைத்தார் கார்த்தி. தேசிங்கு பெரியசாமி, மகேஷ் முத்துசாமி, சிபி சக்கரவர்த்தி, எச் வினோத் போன்றவர்களை காத்திருக்க வைத்தார் நடிகர் கமல்ஹாசன். இதுவரை இயக்குநர் எச் வினோத் கமல் படத்தை இயக்குவாரா, இல்லையா என்பதற்கு விடை இல்லை.

- Advertisement -

இப்படி சிறந்த படங்களை தந்த இயக்குநர்களை அட்வான்ஸ் கொடுத்து மாதணக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் அவர்களை இந்த ஸ்டார் நடிகர்கள் முடக்கி வைத்துவிட்டு, அவர்கள் நடித்துவரும் படங்களில் பிஸியாகி விடுகின்றனர். அவர்களை நினைக்கக்கூட நேரமில்லாத அளவுக்கு ஹீரோக்கள் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி விடுகின்றனர்.

ஒரு காலகட்டத்துக்கு பிறகு இந்த கதையில், இந்த படத்தில், இந்த காம்பினேஷில், தயாரிப்பு நிறுவனத்தில் நடித்தால் சக்சஸ் ஆகுமா, ஆகாதா என திடீர் முடிவெடுத்து, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தவிர்த்து விடுகின்றனர். இதை கமல், சூர்யா, கார்த்தி போன்றவர்கள் தொடர்ந்து செய்கின்றனர். இதனால் பல வெற்றிப்பட இயக்குநர்கள் அடுத்து தங்களது படங்களை இயக்க முடியாமல் போகிறது.

- Advertisement -

சற்று முன்