தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் சில படங்களை இயக்கினார். போடா போடி படத்தை முதன்முறையாக இயக்கி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சிம்பு, வரலட்சுமி ஜோடியாக நடித்திருந்தனர். நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரியதாக வரவேற்பு பெறவில்லை.
அஜீத்குமாரின் விடாமுயற்சி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தும், கடைசி நேரத்தில் அது கைநழுவி போய்விட்டது. நயன்தாரா, இதுகுறித்து அஜீத்திடம் பேசியும் அவர் கடைசி வரை நோ என்ற பதிலையே தந்துவிட்டார். அதனால் இனி அஜீத் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார் நயன்தாரா.
கடந்த 2 ஆண்டுகளாக படத்தை இயக்கும் வாய்ப்பே இல்லாமல் வீட்டில் இருந்துக்கொண்டு, சில படங்களுக்கு பாடல்களை எழுதினார். அந்த பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்பது மட்டுமே அவரது அடையாளமாக இருக்கிறது.
இந்த சூழலில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் 60 கோடி முதல் 65 கோடி ரூபாய் வரைதான் பட்ஜெட். அதற்கு மேல் போனால், இயக்குநர்தான் அதை ஈடுகட்ட வேண்டும் என, அக்ரிமென்ட் போட்டு இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
இதற்கிடையே பிரதீப் ரங்கநாதன் சம்பளம் 8 கோடி, விக்னேஷ் சிவன் சம்பளம் 10 கோடி, எஸ்ஜே சூர்யா சம்பளம் 5 கோடி, அனிரூத் சம்பளம் 8 கோடி என 31 கோடிக்கு மேல் பிரதான நடிகர்களின் சம்பளமே கழிகிறது. மீதி பணத்தை வைத்து படத்தை முடிக்க முடியாது. அதனால் 25 கோடி ரூபாய் வரை இந்த படத்துக்கு நஷ்டமே ஏற்படும் என, கூட்டிக்கழித்து பார்த்து ஒரு தயாரிப்பாளர் இப்போதே நிலவரத்தை கணித்து சொல்லி விட்டாராம்.
அதனால் இப்போதைய சூழ்நிலையில், மார்க் ஆண்டனி படத்தை காப்பாற்றியது போல, இந்த படத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில், நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா இருக்கிறார். அதனால் அவரை மலை போல நம்பித்தான் விக்னேஷ் சிவன் எல்ஐசி படப்பிடிப்பை நடத்த உள்ளார். இந்த படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் நடிப்பதும், அக்கா கேரக்டரில் நடிக்காமல் நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலகியதும் கூடுதல் தகவல்.





