- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம் என்னுடைய கதை, இப்படி அடுத்தவர் கதையை திருடி படம்...

தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம் என்னுடைய கதை, இப்படி அடுத்தவர் கதையை திருடி படம் எடுப்பது அசிங்கமாக இல்லையா? – பிரபல நடிகர் கேள்வி

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படம் கேப்டன் மில்லர். இந்த படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. படம் முழுவதும் துப்பாக்கி சத்தம், வன்முறை என குடும்பத்துடன் பார்க்க முடியாத படம் என்றுதான் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிநாடுகளில் இந்த படம் அமோகமாக வசூல் மழையை குவித்திருக்கிறது. குறிப்பாக ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த படம், கேரளாவில், ரூ. 3 கோடியை குவித்திருக்கிறது. ஆனால் ரூ. 75 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அயலான் படத்தை குழந்தைகள் கூட விரும்பவில்லை.

- Advertisement -

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் கதை என்னுடையது. நான் எழுதிய பட்டத்து யானை என்ற நாவலில் இருந்து திருடப்பட்டுள்ளது என பிரபல நடிகர், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார். இவர், பல படங்களில் நடித்திருக்கிறார். சன் டிவியில் எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் தற்போது நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

வேல ராமமூர்த்தி, முன்னாள் ராணுவ வீரர். அதுமட்டுமின்றி இவர் ஒரு எழுத்தாளர். குற்றப் பரம்பரை, குருதி ஆட்டம், அரியநாச்சி, பட்டத்து யானை உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்நிலையில், பட்டத்துயானை நாவலில் இருந்த கதையை திருடி, கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து வேல ராமமூர்த்தி கூறுகையில், பட்டத்து யானை கதையை பின்னணியாக கொண்டு கேப்டன் மில்லர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்ய அசிங்கமாக இல்லையா, பட்டத்து யானை நாவலை எழுதிய நான் .உயிரோடுதான் இருக்கிறேன். இதுபற்றி என்னிடம் கேட்டிருக்கலாம். அல்லது அனுமதி வாங்கியிருக்கலாம்.

இதுகுறித்து திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளேன். புகார் கொடுத்தாலும் வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள். தமிழ் சினிமாவில் இப்படி கதைகளை திருடுவது அடிக்கடி நடப்பது அசிங்கமாக இருக்கிறது. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் திருடுகின்றனர். ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது, என்று கூறியிருக்கிறார் வேல ராமமூர்த்தி.

- Advertisement -

சற்று முன்