நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர். முன்னணி ஹீரோ நடிகர்களுடன் விஜய், அஜீத், தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் நடித்தவர். தெறி, கத்தி, தங்கமகன், காத்து வாக்குல ரெண்டு காதல், சீம ராஜா போன்ற படங்களில் சமந்தா தமிழ் ரசிகர்களை அசர வைத்தார். இப்போது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
நடிகை சமந்தா என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக இருந்திருக்கின்றன. நாகர்ஜூனா – அமலா நட்சத்திர தம்பதியின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
நாக சைதன்யா, சமந்தா பிரிவுக்கு முக்கிய காரணம், திருமணத்துக்கு பிறகு சமந்தாவை நடிக்க வேண்டாம் என நாகசைதன்யா கூறியதுதான் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி புஷ்பா படத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா, ஊஹூம் சொல்றியா மாமா பாடலில் படுகவர்ச்சியாக நடனமாடி இருந்தார். அதற்கு பிறகுதான் சினிமாவில் அவரை நடிக்கவே கூடாது என, நாகார்ஜூனா குடும்பம் மறுத்துள்ளது. இந்த பிரச்னை கடைசியில் விவாகரத்தில் முடிந்துள்ளது.
விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் எனப்படும் தோல் அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடந்த பல மாதங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார். அதனால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களில் மட்டுமே அவர் நடிக்கிறார். புதிய படங்களில் நடிக்கவில்லை. இப்போது சென்னை ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸ்சில் மட்டுமே நடிக்கிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணம் இருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, 2023ம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்த கொண்டவர்களின் விவாகரத்து 50 சதவீதமாக உள்ளது. அதே சமயம் இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்து கொண்டவர்களின் விவாகரத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே 67 சதவீதம், 73 சதவீதம் என உள்ளது. இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அது மிக மோசமான முதலீடு என்று கூறியிருக்கிறார் சமந்தா.
அதாவது ரமணா படத்தில், எதை கேட்டாலும் புள்ளி விவரங்களை குறிப்பிட்டு பேசுவார் விஜயகாந்த். அந்த அடிப்படையில் புள்ளிவிவர கணக்கு சொல்லி இருக்கிறார் சமந்தா. முடிவில் இரண்டாவது திருமணம் என்பது மோசமான முதலீடு. 2வது, 3வது திருமணம் செய்தவர்களும் அதிகளவில் விவாகரத்து செய்துள்ளனர் என்று கூறி, இனி நான் முரட்டு சிங்கிள்தான் என்ற முடிவை திட்டவட்டமாக அறிவித்துள்ளார் சமந்தா.





