- Advertisement -
Homeபொழுதுபோக்குசம்பாதிக்கிற வயசுல இப்படி நடிக்காமல் ஊரை சுத்தறானே? நடிகர் ரஜினிகாந்தை விமர்சனம் செய்த பிரபல நடிகர்...

சம்பாதிக்கிற வயசுல இப்படி நடிக்காமல் ஊரை சுத்தறானே? நடிகர் ரஜினிகாந்தை விமர்சனம் செய்த பிரபல நடிகர் – கடைசியில் என்ன சொன்னார் தெரியுமா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது வரை 172 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதில் 171வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி படம் கடந்தாண்டில் வெளியானது. இப்போது 172வது படமாக ஜெயிலர் 2 படம் உருவாகி விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக வரும் ஏப்ரலில் தலைவர் 173 என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசனுடன் நடிகர் ரஜினிகாந்த் விடுதலை படிக்காதவன் படையப்பா போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த படம் படையப்பா. இந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே சிவாஜி கணேசன் நடித்த கடைசி படமாகும்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, படையப்பா பட ஷூட்டிங்கில் சிவாஜி என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் என்னிடம் சொன்னது இது. டேய் நான் பிரபு ராம்குமாரிடம் சொல்லிக்கிட்டு இருந்தேன். இவன் என்ன சம்பாதிக்கிற வயசுல இமயமலை போறேன். அமெரிக்கா போறேன் லண்டன் போறேன்னு இருக்கான்.

2 வருஷத்துக்கு ஒரு படம் 1 வருஷத்துக்கு ஒரு படம்ன்னு பண்றான். இவனுக்கு சொல்றதுக்கு ஆளே இல்லையா? சம்பாதிக்கிற வயசுல சம்பாதிக்கணும். இப்படி இவன் ஊரை சுத்தீட்டு இருக்கான்னு உன்னை பத்தி நான் சொல்லிட்டு இருந்தேன். ஆனா இல்லைடா. நீ பண்றதுதான் கரெக்ட். நீ பண்றது சரிதான்.

- Advertisement -

எனக்கு நடந்தது பார். ஷூட்டிங்கில அப்படி பிஸியா நான் இருந்தேன். ஒரு கட்டத்துல டக்குன்னு ஷூட்டிங் எல்லாம் இல்லேன்னு சொன்னதும் என்ன பண்றதுன்னே தெரியாது. எனக்கு நண்பர்களும் இல்லே. எங்க போறது? அப்படியே ரூம்ல அடைச்சு போட்ட மாதிரி இருந்து இருந்து பெரிய டிப்ரசன் ஆயிடுச்சுடா.

நீ பிஸியா இருந்தாலும் கூட ஷூட்டிங் இல்லாத நேரத்துல எப்படி டைம் பாஸ் பண்றதுன்னு கத்துக்கிட்டடா. சூப்பர் டா. சூப்பர் என்றார். அது எனக்கு சிவாஜி அவர்கள் கொடுத்த பெரிய பாராட்டாக இன்றும் நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த நேர்காணலில் பெருமையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்