நடிகர் விஜய் நடிப்பில், கடந்த அக்டோபரில் வெளியான படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின். மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மொத்தமாக உலக அளவில் ரூ. 600 கோடி வரை வசூலித்தது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம், உலகம் முழுவதும் 550 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது.
ரஜினி – விஜய் ரசிகர்களுக்கு இடையே இதில் யார் அதிகம் வசூலித்தது, முன்னணியில் வந்தது யார் என்று போட்டி நிலவிய நிலையில் விஜய்தான் முந்தியது என பெருமையாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதே நேரத்தில் விஜய் நடித்த லியோ படத்துக்கு கடுமையான எதிர் விமர்சனங்களும் அதிகமாக இருந்தது.
அதே போல் ஜெயிலர் படமும், ரஜினிக்காக மட்டுமே ஓடியது. இது சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கத்தின் கதை. அதை அப்படியே உல்டாவாக்கி எடுத்துள்ளனர். அதிலும் கதை மிகவும் அரதப்பழசானது. மகனை கடத்திய வில்லனை ஹீரோ பழிவாங்கும் 1980 படக்கதை என பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
இப்படி இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட நிலையில், ரஜினி மற்றும் விஜய் என 2 மெகா ஹீரோக்கள் நடித்த படங்கள் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இந்த படங்கள் அதிக வசூலை குவிந்த படங்களாக இருந்தன என்றும் பலரும் கூறியதும் மறுக்க முடியாத உண்மையாக இருந்தது.
இதற்கிடையே கடந்த பொங்கல் ஜனவரி 15 அன்று, சன்டிவில் லியோ படம் முதல் பிரிமியரி்ல் ஒளிபரப்பானது. இந்த படத்தை பார்த்தவர்கள் 13.1 மில்லியன் என்ற நிலையில், 16.30 டிஆர்பி ரேட்டிங் ஆக இருந்தது. அதற்கு முன்பு ஜெயிலர் படம் முதல் பிரிமியர் டிஆர்பி ரேட்டிங் 15.59 புள்ளிகள் ஆக இருந்தது. இதில் விஜய், ரஜினியை முந்தினார். இந்த இரண்டு படங்களுக்கு முன் முதல் பிரிமியராக ஒளிபரப்பான விஸ்வாசம் படத்தை 18.14 மில்லியன் பேர் பார்த்துள்ளதால் இதில் ரஜினி, விஜயை விட அஜீத்குமார் தான் முன்னிலையில் இருக்கிறார்.





