தமிழ் சினிமாவில் கேஆர் விஜயாவுக்கு பிறகு புன்னகை இளவரசி என்ற பட்டத்தை பெற்றவர் நடிகை சிநேகா. விரும்புகிறேன் என்ற படத்தில், நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது இயல்பான அழகு, ரசிகர்களை வசீகரித்தது. தொடர்ந்து தமிழில் அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.
ஆனந்தம், என்னவளே, பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, புதுப்பேட்டை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் சிநேகா நடித்தார்.
இந்நிலையில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது, நடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை சிநேகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருதரப்பு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்த நிலையில், இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு, நல்ல கேரக்டர்களில் தேர்வு செய்து, நடிகை சிநேகா நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில், ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். தனுஷ் உடன் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். இப்போது, வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். டிவி ஷோக்களிலும் சிநேகா பங்கேற்கிறார்.
இந்நிலையில், நடிகை சிநேகா குறித்து, பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு உண்மையை பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரசன்னாவை, சிநேகா செய்தது 2வது திருமணம்தான் என்ற ஒரு வெடிகுண்டை போட்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, சிநேகா தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டு இருந்த போது தெலுங்கு பட தயாரிப்பாளர் நாக் ரவிக்கும், சிநேகாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து, சிநேகாவுக்கு மோதிரமும் மாட்டப்பட்டது. ஆனால் 2 மாதங்களுக்கு பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். நிச்சயித்த திருமணம் நடக்கவில்லை. நம் வழக்கப்படி பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் செய்து மோதிரம் மாற்றினாலே, பாதி திருமணம் நடந்த மாதிரி தான். அவர்களை புருஷன் பொண்டாட்டி என்றுதான் சொல்வார்கள். அதற்கான அர்த்தமும் அதுதான் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.





