- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் பிரச்னை, படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி போலீசில் புகார் தெரிவித்த பொதுமக்களால்...

தனுஷ் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் பிரச்னை, படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி போலீசில் புகார் தெரிவித்த பொதுமக்களால் பரபரப்பு

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷை நடிகராக்கியது, அவரது மூத்த மகன் செல்வராகவன்தான். துள்ளுவதோ இளமை படத்தில், கதாநாயகனாக நடிக்க வைத்தார். செல்வராகவனும் இயக்குநராக அவதாரம் எடுத்தார். சமீபமாக அவரும் நடிக்க துவங்கி விட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மருமகன் என்ற பெருமையும் தனுஷூக்கு உள்ளது. அவரது மூத்தமகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர். இருவருக்கும் லிங்கா, யாத்ரா என 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகளால் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே இரண்டு தரப்பு பெற்றோரின் விருப்பமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தனுஷ், மிக தீவிரமாக நடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற பெயரில், தனுஷ் சொந்த படம் எடுக்கும் முயற்சியிலும் இருக்கிறார். மிக விரைவில் இந்த படப்பிடிப்பை தனுஷ் துவங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் வெளியான அவரது கேப்டன் மில்லர் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதுவரை 105 கோடி ரூபாய் வரை, உலகம் முழுவதும் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வன்முறை காட்சிகள், துப்பாக்கி சுடும் காட்சிகள் அதிகம் என்றாலும், படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு புதிய படத்தில், அதாவது தனுஷின் 51வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் பட பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இதில் முக்கிய கேரக்டரில் நடிகர் நாகர்ஜூனா நடிக்கிறார். நடிகர் சரத்குமாரும் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பதியில் இந்த படத்தின் ஷூட்டிங் இன்று நடந்தது. திருப்பதி மலையின் அடிவாரத்தில் அலிபிரி என்ற இடத்தில் தனுஷ் பங்கேற்று நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, அவ்வழியாக சென்றுவர முடியாமல் அப்பகுதி மக்கள் மற்றும் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், பவுன்சர்கள் போக்குவரத்தை மாற்றியதால் ஆத்திரமடைந்த மக்கள், படப்பிடிப்பை உடனே நிறுத்துமாறு போலீசில் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து போக்குவரத்தை மாற்றி விட்டனர்.

- Advertisement -

சற்று முன்