நடிகர் ரஜினிகாந்த் இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் நடித்துவரும் படம் வேட்டையன். இது ரஜினியின் 170வது படம். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில், பகத் பாசில் ரஜினிக்கு மகன் கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி 171 படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்கிறார். இதற்காக கடந்த 2 மாதங்களாக அவருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூம் போட்டுக்கொடுத்து கதை எழுதச் சொல்லி இருக்கிறது. ரூம் வாடகை மாதம் ரூ. 3 லட்சம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்த படத்தை தயாரிப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான்.
அதன்பிறகு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தை இயக்கப் போவதும் சன் பிக்சர்ஸ்தான். ஜெயிலர் படம் தந்த மிகப்பெரிய வெற்றியால், மகிழ்ந்து போயுள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அடுத்தடுத்த ரஜினியின் 2 படங்களை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விஷால் விஷ்ணு, விக்ராந்த், தம்பி ராமையா, தான்யா பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் காவிரி விவகாரத்தில், தமிழர்களை கேவலமாக திட்டிய தான்யா, இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பது ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் படத்தை பொருத்தவரை வெற்றிப்படமாகவே இருக்கும் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே, ஐஸ்வர்யாவிடம் சொல்லி இருக்கிறார். அதாவது கடந்த பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் தள்ளிப் போனது. ஆனால் லால் சலாம் எப்போது வந்தாலும் வெற்றி பெறும் என ஐஸ்வர்யாவிடம் நம்பிக்கையாக கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் லால் சலாம் படத்துக்கு ரஜினிகாந்த் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது, இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரஜினி பெற்ற சம்பளம் ரூ. 40 கோடி. மகள் டைரக்ட் செய்த படத்தில் நடிக்கவே இப்படி பெருந்தொகை ரஜினி வாங்கியிருக்கிறாரே என சிலர் புலம்ப, வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க ரூ. 120 கோடி சம்பளம் வாங்கும் அவர், அதில் 3ல் ஒரு பங்கு என நியாயமாக தான், லால் சலாம் படத்தில் நடிக்க வாங்கியிருக்கிறார் என்று படக்குழுவினர் கூறி வருகின்றனர்.





