சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி, கல்லீரல் புற்றுநோயால் இறந்தார். இலங்கையில் இருந்து அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, இளையராஜா வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின், தேனி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான பண்ணைபுரத்தில், இளையராஜாவின் அம்மா, மனைவி ஆகியோர் நினைவிடங்களுக்கு மத்தியில் பவதாரணி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் நேரில் வரவில்லை. அதேபோல் பவதாரணியின் இறுதி சடங்கிலும் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது வீட்டில் தனியறையில் அமர்ந்துக்கொண்டு கதறி கதறி அழுது புலம்பியிருக்கிறார். ஆனால் அண்ணன் மகளின் மறைவுக்கு நேரில் வராமல் இருந்திருக்கிறார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, இளையராஜா இசையில் வல்லவர். அவர் இசைஞானி, அவரது புலமையை யாரும் மிஞ்ச முடியாது. ஆனால் தனிப்பட்ட மனிதராக அவரைப் போல, அசிங்கமானவர் யாருமே இருக்க முடியாது. ஏனெனில் அப்படி அருவெறுக்கத்தக்க முறையில்தான் அவர் நடந்துக்கொண்டு இருக்கிறார்.
ஒரு தம்பியாக ஏகப்பட்ட உதவிகளை செய்து, அண்ணன் இளையராஜாவுக்கு கேடயமாக இருந்தவர்தான் கங்கை அமரன். பல நேரங்களில் கங்கை அமரன் எழுதிய பாடல்களுக்கு இளையராஜா தன் பெயரை போட்டுக் கொண்டவர். உழைப்பவர் கங்கை அமரன், சம்பளம் வாங்குபவர் இளையராஜா என இருந்தும் அதை கங்கை அமரன் நாகரிகம் கருதி வெளியில் சொல்லவில்லை.
அப்படிப்பட்ட தம்பியை வீட்டை விட்டு வெளியே போடா என விரட்டியவர் இளையராஜா. அவரது மனைவி ஜீவா இருந்த போது, அண்ணியின் உடலை பார்க்க வீட்டுக்கு ஓடோடி வந்த கங்கை அமரனை, அவனை உள்ளே விடாதீங்க என தடுத்தவர் இளையராஜா. அம்மாவை விட அண்ணி கையால் தான் அதிகமுறை சாப்பிட்டிருக்கிறேன். ஒருமுறை கடைசியாக அவரது முகத்தை பார்த்துக் கொள்கிறேன் என கதறிய கங்கை அமரனை, பார்க்க அனுமதிக்குமாறு அங்கிருந்த பெரிய தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால், முகத்தை திருப்பிக் கொண்டு நின்றுக்கொண்டு பார்த்துட்டு போகச் சொல்லுங்க என வெறுப்பாக சொல்லி இருக்கிறார்.
கங்கை அமரன் பாஜகவில் இருந்த போது அவருக்கு எம்பி பதவி தேடி வந்தது. எனக்கு வேண்டாம். என் அண்ணனுக்கு அந்த பதவியை கொடுத்து கவுரவப்படுத்துங்கள், என எம்பி பதவியை அண்ணனுக்கு விட்டுக்கொடுத்த கங்கை அமரனை மிகவும் மனதளவில் நோகடித்திருக்கிறார் இளையராஜா. அதனால்தான், மகன்கள் மட்டுமே உள்ள தனக்கு, இன்னொரு மகளாக நினைத்த பவதாரணி மறைவுக்கு போகாமல் தவிர்த்திருக்கிறார் கங்கை அமரன். மீண்டும் இளையராஜாவை சந்திக்க விரும்பாமல் பவதாரணி மறைவுக்கே போகாமல் இருந்துவிட்டார் கங்கை அமரன் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.





