- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்ஐகே படத்தில் முதலில் நடிக்க இருந்தது அவர்தான், பிறகுதான் பிரதீப் ரங்கநாதன் கமிட் ஆனார் -...

எல்ஐகே படத்தில் முதலில் நடிக்க இருந்தது அவர்தான், பிறகுதான் பிரதீப் ரங்கநாதன் கமிட் ஆனார் – சஸ்பென்சை உடைத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!

- Advertisement -

கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் காஜல் அகர்வால், யோகிபாபு, ஆர்ஜே ஆனந்தி, சாரா, கேஎஸ் ரவிக்குமார், ராமர், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிளைமாக்ஸ் காட்சியில் பிரதீப் ரங்கநாதனும் ஆட்டோ டிரைவராக ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே நாயகனாக நடித்த படம் லவ்டுடே. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, நாயகியாக இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளம் காதலர்களை மையப்படுத்திய இந்த படம் மொபைல் போனை காதலர்கள் மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்ற கதைக்களத்தில் உருவாகி இருந்தது.

- Advertisement -

லவ்டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன், சில ஆண்டுகளாக வேறு படங்களை இயக்கவோ, நடிக்கவோ இல்லை. பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது எல்ஐகே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரது சம்பளம் ரூ. 15 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு முதலில் எல்ஐசி என வைக்கப்பட்டு, பிறகு எல்ஐகே என மாற்றப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற வார்த்தைகளின் சுருக்கமாக தான் எல்ஐசி என படத்துக்கு டைட்டில் வைத்ததாக கூறினார். ஆனால் எல்ஐசி ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சுருக்கம் எல்ஐசி என்பதால், அந்த நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்பிறகே இந்த பெயரை எல்ஐகே என மாற்றம் செய்துள்ளனர். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரதீப் ரங்கநாதன் கிடையாது.

- Advertisement -

இதுகுறித்து விக்னேஷ் சிவன் கூறியதாவது, நான் நினைப்பது போல் படம் எடுக்க முடியவில்லை என்றால் அந்த படத்தை நான் எடுக்க மாட்டேன். ஏனெனில் நான் சந்தித்த வீழ்ச்சிகள் மிகப் பெரியது. எல்ஐகே படமே டிராப் செய்யப்பட்ட படம்தான். கடந்த 2018ம் ஆண்டில் சிவகார்த்திகேயனை வைத்து அந்த படம் ஆரம்பிக்க வேண்டியது.

இது ஒரு ப்யூச்சர் பற்றிய படம் என்பதால் நிறைய பட்ஜெட் தேவைப்பட்டது. அதனால் லைகா நிறுவனம் இந்த படத்தை நிகழ்காலத்தில் நடப்பது போல் எடுக்க சொன்னார்கள். அதை எப்படி மாற்ற முடியும், பாகுபலி படத்தை நிகழ்கால கதை போல எடுக்க முடியுமா என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். தற்போது இந்த படத்தை லியோ படத்தை தயாரித்த எஸ்எஸ் லலித்குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்