- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது படத்தில் நடிக்க ஆசைப்பட்டு வந்த இளம் ஹீரோ நடிகரை பரோட்டா மாஸ்டராக மாற்றிய டைரக்டர்...

தனது படத்தில் நடிக்க ஆசைப்பட்டு வந்த இளம் ஹீரோ நடிகரை பரோட்டா மாஸ்டராக மாற்றிய டைரக்டர் பாலா – இது உருட்டல்ல… உண்மை சம்பவம்!

- Advertisement -

இயக்குநர் பாலா இயக்கும் படங்களில் மட்டும் வித்யாசமல்ல, அவரது கேரக்டரே வித்யாசமானதுதான். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், அவர் படத்தில் நடிக்க வந்துவிட்டால் அவரை, பாலா தன் இஷ்டப்படிதான் நடத்துவார். எந்த மரியாதையும், முக்கியத்துவமும் தர மாட்டார். அடிமை போல நடத்துவார் என்பதுதான் கசப்பான, பச்சையான உண்மை.

சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான படம் சாட்டை. இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை, வெற்றியை பெற்றது. பள்ளி வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் சமுத்திரக்கனி ஆசிரியராக நடித்திருப்பார். அதே போல் தம்பி ராமையா, ஜூனியர் பாலையா, ஹலோ கந்தசாமி உள்ளி்ட்ட பலம் நடித்திருப்பர்.

இந்த படத்தில் 12ம் வகுப்பு மாணவியாக மஹிமா நம்பியார் நடித்திருப்பார். அவரது வகுப்பில் படிக்கும் மாணவனாக, படத்தில் இளம் நாயகனாக யுவன் நடித்திருப்பார். இவர், இயக்குநர் பெரோஸ்கானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவராக இவரது நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகவே இருந்தது.

சாட்டை படத்தில் நடிப்பதற்கு முன்பே யுவன், பாசக்கார நண்பர்கள் என்ற படத்தில் நடித்து அந்த படம் 2011ம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில், அடுத்த படமான சாட்டை யுவனுக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது. கீரிப்பிள்ளை, கமரக்கட்டு, இளமி, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம் என 10 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அவர் நடித்த 5 படங்கள் பாதியில் நின்றும் போனது.

எனினும் பல படங்களில் தொடர்ந்து நடித்தும் அவர் எதிர்பார்த்தது போல வெற்றியும், போதிய அங்கீகாரம் தமிழ் சினிமாவில் அவருக்கு கிடைக்காதது பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் அவர் ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணி செய்கிறார். விதவிதமான பரோட்டாக்களை செய்வது குறித்து யூடியூப் சேனலில் நேர்காணல் தந்திருக்கிறார். நடிகரான அவர், பரோட்டா மாஸ்டராக மாறியதற்கு டைரக்டர் பாலா தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

 actor Yuvan

அதில் நடிகர் யுவன் கூறியதாவது, இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்க ஒரு படத்தில் கமிட் ஆகியிருந்தேன். அந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் கடைசி வரை படம் ஆரம்பிக்காமல் நின்று போனது. நான் எங்கு போனாலும், பாலா படத்தில் நடிப்பது என்னாச்சு என்றுதான் என்னை கேட்கின்றனர். அந்த படத்தில் நடிக்க வேண்டிய கேரக்டருக்காக தான் பரோட்டா செய்ய கற்றுக்கொண்டேன். இப்போது அதுவே என் வாழ்க்கையாக மாறிவிட்டது, என்று கூறியிருக்கிறார் நடிகர் யுவன்.

 actor Yuvan

சற்று முன்