- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் மீண்டும் தன் அண்ணனுக்கு டிமிக்கி கொடுக்கும் ஜெயம் ரவி, தம்பி உடையான் தடைக்கு அஞ்சான்...

மீண்டும் மீண்டும் தன் அண்ணனுக்கு டிமிக்கி கொடுக்கும் ஜெயம் ரவி, தம்பி உடையான் தடைக்கு அஞ்சான் – என்ன கொடுமை சார் இது?

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி, ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால், ரவி என்ற தனது பெயருக்கு பின்னால் ஜெயம் சேர்த்துக்கொண்டார். அடுத்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஆக்‌ஷன் படமாக ஜெயம்ரவிக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இதில் அசின் கதாநாயகியாக அசத்தியிருந்தார்.

தொடர்ந்து ஜெயம் ரவிக்கு பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன. அதில் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், போகன், தீபாவளி என பல படங்கள் அவருக்கு பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

குறிப்பாக அகிலன், இறைவன் போன்ற படங்கள் மிகப்பெரிய பிளாப் படங்களாக ஜெயம் ரவிக்கு அமைந்தன. தற்போது அவர் சைரன் 108 படத்தை தான் மிக ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறார். அந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதுதவிர காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் ஜெயம் ரவி, ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால், இரண்டாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி சொதப்பியதால், படத்தின் மீது ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். ஏனெனில் கல்கி எழுதிய நாவலின் முடிவு வேறு மாதிரியாக இருக்கும். அதை இயக்குநர் மணிரத்னம் மாற்றியது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ஜெயம் ரவி இதுவரை நடித்த படங்களில் மிகச் சிறந்த படமாக அமைந்தது தனி ஒருவன். இதில் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி, அவருக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருந்தனர். பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்ற இந்த படத்தை தனி ஒருவன் 2 என எடுக்க, அவரது அண்ணன் மோகன் ராஜா பலமுறை கேட்டும் ஜெயம் ரவி கால்ஷீட் தரவில்லை.

இந்நிலையில் வரும் ஏப்ரலில் தனிஒருவன் 2 படத்தை துவங்கலாம் என ஜெயம் ரவி உறுதியளித்திருந்த நிலையில், திடீரென மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில், ஜெயம் ரவியும் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, தனி ஒருவன் 2 திட்டத்தை டிசம்பருக்கு தள்ளி வைத்து விடலாம் என்று ஜெயம் ரவி, தன் அண்ணனிடம் கூலாக சொல்லி விட்டார். இதனால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார் ஜெயம் ரவி அண்ணன் மோகன் ராஜா.

சற்று முன்