- Advertisement -
Homeபொழுதுபோக்குநள்ளிரவில் நடந்த அந்த தகாத சம்பவம், குடிபோதையில் வந்த நபரை சமாளிக்க முடியாமல் திணறிய கீர்த்தி...

நள்ளிரவில் நடந்த அந்த தகாத சம்பவம், குடிபோதையில் வந்த நபரை சமாளிக்க முடியாமல் திணறிய கீர்த்தி சுரேஷ் – இது உருட்டல்ல… நடந்த உண்மை!

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளம், தெலுங்கு, தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் முன்னணி ஹீரோக்களின் வெற்றிப் படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது அழகும், திறன்பட்ட நடிப்பும் தொடர்ந்து பட வாய்ப்புகளை தந்து வருகிறது.

பைரவா, சர்க்கார், சாமி 2, தொடரி, நடிகையர் திலகம், மாமன்னன், அண்ணாத்த, ரஜினி முருகன், ரெமோ என பல வெற்றிப்படங்களில், விஜய், தனுஷ், சியான் விக்ரம், உதயநிதி என ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கையாக, கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் நடித்த சைரன் என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இப்போது இந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் அட்லீ தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளை தொடர்ந்து, பாலிவுட்டிலும் கீர்த்தி சுரேஷ் கொடி விரைவில் பறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்க்கையில் நடந்த மிக கசப்பான ஒரு சம்பவம் குறித்து, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். ஒருநாள் நானும் என் தோழியும் இரவில் ரோட்டில் நடந்து சென்றுக்கொண்டு இருந்தோம். அப்போது பயங்கர குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் என் மீது வந்து விழுந்து விட்டார். நிறைய குடித்திருந்த அந்த வாலிபர் என் மீது விழுந்ததால், எனக்கு ஆத்திரமாக வந்தது. அந்த நபரை ஓங்கி அடித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

- Advertisement -

சிறிது நேரத்துக்கு பின் என் தலையில் யாரோ வேகமாக அடித்தது போல இருந்தது. நான் ஏதோ விபத்தில் சிக்கிக் கொண்டேன். ஏதோ என் மீது வந்து மோதிவிட்டது. நான் இறந்துவிட்டேனோ என்று நினைக்கும் அளவுக்கு பயந்து விட்டேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த பையன் என் தலையில் அடித்துவிட்டு வேகமாக ஓடுவது பிறகுதான் தெரிந்தது.

எனக்கு சில நிமிடங்கள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அதன்பிறகு நானும், என் தோழியும் அவனை துரத்திப் பிடித்தோம். பக்கத்தில் இருந்த போலீஸ் பூத்தில் அவனை ஒப்படைத்தோம், என்று கூறியிருக்கிறார். நள்ளிரவில் நடந்த அந்த தகாத சம்பவத்தில், போதை நபரை எதிர்கொள்ள முடியாமல், அடிவாங்கி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் கடைசியில் போலீசில் பிடித்து கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்