- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு மட்டுமல்ல… அவரது மகனுக்கும் நான் போட்டிதான் … - நடிகர் சிவகார்த்திகேயனின் அந்த...

நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல… அவரது மகனுக்கும் நான் போட்டிதான் … – நடிகர் சிவகார்த்திகேயனின் அந்த செயலால் எழுந்த திடீர் சர்ச்சை!

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால் அவரது இடத்தை சினிமாவில் பிடிக்கப் போவது சிவகார்த்திகேயன் என்ற ஒரு தகவல் ஏற்கனவே இருந்து வருகிறது. இதற்கு தி கோட் படத்தில் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுத்த காட்சியும் ஒரு முக்கிய காரணமாக பேசப்படுகிறது.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த விஜய் இப்போது அரசியல் களத்துக்கு சென்றுவிட்டதால் அவரது இடத்தை பிடித்து விட்டால் அவரை போலவே நூறு கோடிகளில் சம்பளம் வாங்கலாம் என்ற ஆசையும் மற்ற ஹீரோக்களுக்கு வருவது நியாயம்தான் என்பதாலும் அந்த இடத்துக்கு போட்டோ போட்டி நீடிக்கிறது.

- Advertisement -

அதில் சிவகார்த்திகேயன் அதிக ஆர்வம் காட்டுவதாக பேசப்படுகிறது. நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதனால் நடிகர் விஜயுடன் நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

இந்நிலையில் விஜய்க்கு மட்டுமல்ல, விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கும் சிவகார்த்திகேயன் போட்டியாக இப்போது மாறிவிட்டதாக ஒரு புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது. நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைகா புரடக்சன் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள சிக்மா என்ற படத்தை முதன் முறையாக டைரக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தின் டீசர், வருகிற டிசம்பர் 23ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இதுகுறித்த ஒரு பிரமோ டீசர் வீடியோ நேற்று மாலை சரியாக 5 மணிக்கு வெளியானது. குறிப்பிட்ட அதே நேரத்தில் சரியாக மாலை 5 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்து உருவாக உள்ள புதிய படத்தின் கிளிம்பஸ் வீடியோவும் வெளியானது.

ஏற்கனவே நடிகர் விஜயோடு ஜனநாயகன் படத்தில் மோதும் சிவகார்த்திகேயன் இப்போது விஜயின் மகன் ஜேசன் இயக்கிய படத்தின் டீசர் அப்டேட் பிரமோ வீடியோ வெளியான அதே நேரத்தில், தனது அடுத்த படத்தின் வீடியோ கிளிம்ப்ஸை வெளியிட்டது சமூக வலைதளங்களில் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்பாவுடன் மட்டுமல்ல மகனுடனும் சிவகார்த்திகேயன் போட்டி போடுகிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்