- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் இடத்தை பிடிக்கப் போறது அந்த நடிகரா? - அவரது இடத்தை பிடிக்க போறது இந்த...

விஜய் இடத்தை பிடிக்கப் போறது அந்த நடிகரா? – அவரது இடத்தை பிடிக்க போறது இந்த நடிகரா? – இது விஜய்க்கு தெரிஞ்சா மறுபடி நடிக்க வந்துடுவாரே?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படத்தில் விஜய் இரட்டை ரோலில் நடிக்கிறார். அப்பா கேரக்டர் விஜய்க்கு சினேகாவும், மகன் கேரக்டர் விஜய்க்கு மீனாட்சி சௌத்ரியும் ஜோடியாக நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் படத்தை தயாரிக்கிறது.

தமிழக வெற்றி கழகம் கட்சியை துவங்கியுள்ள விஜய், இந்த படத்தை முடித்துவிட்டு தனது 69வது படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் குறித்து பல்வேறு தகவல்கள் பரவினாலும், விஜய் தரப்பில் இருந்தும் வெளியாகும் தகவலே உறுதியானதாக இருக்கும். ஏனெனில் இந்த விஷயத்தில் தினமும் ஒரு புதிய தகவல் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் நம்பர் ஒன் பொசிஷனில் இருந்தவர். அவரது இடத்தை இப்போது அப்படியே விட்டுவிட்டு அரசியலுக்கு போகிறார். வழக்கமாக சினிமாவில் மார்க்கெட் இழந்த பின்புதான், சினிமா நடிகர்கள் அரசியலுக்கு போவது வழக்கம். ஆனால் விஜய் மட்டுமே, எம்ஜிஆரை போல புகழ், செல்வாக்கில் இருக்கும்போதே அரசியலுக்கு செல்கிறார்.

இதையடுத்து விஜய் இடத்தை பிடிக்கப் போவது யாராக இருக்கும் என்ற ஒரு போட்டியே தமிழ் சினிமாத் துறையில் இருந்து வருகிறது. குறிப்பாக விஜய் சேதுபதி, சிலம்பரசன், தனுஷ், சிவகார்த்திகேயன். சூர்யா ஆகிய 5 பேரின் பெயர்கள் இதில் முக்கியமாக அடிபடுகிறது. இந்த சூழலில் சூர்யா மும்பையில் செட்டிலாகி இந்தி, ஆங்கில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருவதால், அவர் அந்த ஜானரில் சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு, கடந்த சில ஆண்டுகளாகவே அவரது பல படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் அவரே அப்செட்டில் உள்ள நிலையில், இந்த கோதாவில் இறங்கினால், அதுதான் அவருக்கு அசிங்கம் என்றும் பலர் கூறத் துவங்கி விட்டனர். இதில் சிலம்பரசன் எல்லாம் போட்டியிலேயே சேர மாட்டார். ஏனெனில் அவர் ஷூட்டிங்குக்கே சரியாக வராதவர். விஜய், அதுபோல் எப்போதும் ஒரு புகாருக்கு ஆளாகதவர். அதனால், விஜயை அந்த விஷயத்தில் கூட சிம்புவால் பின்பற்ற முடியாது என்கின்றனர்.

அடுத்து விஜய் கெத்துக்கு முன், தனுஷ் நிற்கவே முடியாது. அவரது தோற்றமே கெத்தாக இல்லை. அதனால் சிவகார்த்திகேயன்தான், அடுத்து விஜய் இடத்துக்கு வருவதற்கு சரியான நடிகர். அவரிடம் அந்த திறமையும் இருக்கிறது. அப்படி விஜய் இடத்துக்கு சிவகார்த்திகேயன் வந்தால், இப்போது வெற்றி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் ரியோ, அடுத்து சிவகார்த்திகேயன் இடத்துக்கு வந்து விடுவார் என்று பேச்சு எழுந்துள்ளது. இதை எல்லாம் கேட்டால், அரசியலுக்கு செல்ல முடிவெடுத்த விஜய், மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் என சினிமா விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

சற்று முன்