நடிகை மீனா, தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். கடந்த 1990களில் மீனாதான் தமிழ் சினிமாவில் ஆஸ்தான நாயகி. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், பிரபு என முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் அதிகமாக நடித்தார்.
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனா, அம்பிகாவின் மகளாக நடித்திருப்பார். இந்த படத்தில் கெஸ்ட்ரோலில் ரஜினி, நடிகர் ரஜினிகாந்த் கேரக்டரிலேயே நடித்திருப்பார். இந்த படம் 1984ம் ஆண்டில் வெளிவந்தது. இதில் லதா ரஜினிகாந்த் பாடிய கடவுள் உள்ளமே, கருணை இல்லமே பாடல், ஜேசுதாஸ் பாடிய முத்து மணி சுடரே வா என்ற பாடலும் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்கு பிறகு, 9 ஆண்டுகள் கழிந்து 1993ம் ஆண்டில் எஜமான் படம் வெளியானது. இதில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இது கடுமையான விமர்சனத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. சிறுமியாக இருந்த மீனா, வளர்ந்த நிலையில் ரஜினிக்கே ஜோடியாக நடிப்பதா, ரஜினி இதை ஏற்பதா எனவும் பலரும் விமர்சித்தனர்.
எனினும் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் வெளியான எஜமான் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. வாணவராயன் கேரக்டரில் ரஜினி வாழ்ந்திருந்தார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில், நம்பியார் மனோரமா, நெப்போலியன், ஐஸ்வர்யா, விஜயகுமார் என நட்சத்திர பட்டாளமே இருந்தது.
தொடர்ந்து வீரா, முத்து படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அண்ணாத்த படத்திலும், மீனா நடித்திருந்தார். மீனாவை பொருத்த வரை இப்போதும் மலையாளத்தில் பல படங்களில் நடிக்கிறார். டிவி கேம் ஷோக்களில் பங்கேற்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பின், ஆறு மாதங்கள் வரை நடிக்காமல் இருந்த மீனா, மீண்டும் இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகர் நடிகையர் பற்றிய அந்தரங்க விஷயங்கள் உள்பட பல விஷயங்களை நேர்காணலில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பயில்வான் ரங்கநாதன், நடிகை மீனா குறித்த ஒரு தகவலை கூறியிருக்கிறார். அதில், நடிகை மீனாவை நேர்காணல் செய்ய ஒரு பிரபல யூடியூப் சேனலில் அணுகினர். எவ்வளவு நேரம் என மீனா கேட்க, 2 மணி நேரம் என்றனர். அதற்கு ரூ. 13 லட்சம் கொடுங்க என்று கேட்டு வாங்கிக்கொண்டார். ஒரு பேட்டி தருவதற்கு 2 மணி நேரத்துக்கு, 13 லட்சம் வாங்குவது எல்லாம் நியாயமா என கேள்வி கேட்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.





