- Advertisement -
Homeபொழுதுபோக்குலொள்ளு சபா இயக்குனருக்கு வந்த விசித்திர பார்சல், அந்த டாப் நடிகரை கலாய்ச்சதுக்கு இப்படி ஒரு...

லொள்ளு சபா இயக்குனருக்கு வந்த விசித்திர பார்சல், அந்த டாப் நடிகரை கலாய்ச்சதுக்கு இப்படி ஒரு மிரட்டலா?

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” காமெடி நிகழ்ச்சி 90’ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரைட் ஆன நிகழ்ச்சி ஆகும். ஒவ்வொரு திரைப்படங்களையும் வித விதமாக கலாய்த்து தள்ளி பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி அது. இந்த நிகழ்ச்சியை இப்போதும் பலர் இணையத்தில் அடிக்கடி பார்ப்பது உண்டு. அந்தளவுக்கு மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக “லொள்ளு சபா’ திகழ்ந்தது.

தற்போது டாப் காமெடி நடிகர்களாக இருக்கும் சந்தானம், யோகி பாபு ஆகியோர், “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலமாக நம்மிடம் பிரபலமானவர்கள். அதே போல் லொள்ளு சபா மனோகர், ஜீவா, சுவாமிநாதன், பாலாஜி, மாறன், சேசு போன்ற பலரும் “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர்கள்தான்.

“லொள்ளு சபா” நிகழ்ச்சியில் பல டாப் நடிகர்களின் திரைப்படங்களை கலாய்ப்பதால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் “லொள்ளு சபா” குழுவினர் ஒரு சிறப்பு விருதை பெற்றிருந்தனர்.

அப்போது பேசிய லொள்ளு சபா ஜீவா, “நாங்கள் கிண்டல் செய்த நிறைய படத்திற்கு மிரட்டல்கள் வந்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லை. நாங்கள் பல திரைப்படங்களை இமிடேட் செய்திருக்கிறோம். எனக்கு எந்த படம் என்று ஞாபகம் இல்லை, ஏதோ ஒரு படத்தை இமிடேட் செய்ததற்காக சுவாமிநாதன் வீட்டிற்கு ஒரு பாம் பார்சல் சென்றது, மனோகர் வீட்டிற்கும் ஒரு பாம் பார்சல் சென்றது, இயக்குனர் ராம் பாலாவுக்கும் ஒரு பாம் பார்சல் போனது. அது ஒரு மினி பாம்.

பெரிய பெரிய நடிகர்களை இமிடேட் செய்யும்போது நிச்சயமாக அவரவர்களின் ரசிகர்களின் மனம் புண்படுவது வழக்கம்தான். அது அவர்களின் உரிமை. நாங்களும் சில சமயங்களில் மிக அதிமாக கலாய்த்திருக்கிறோம். யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் எல்லோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என பேசியுள்ளார்.

சற்று முன்