- Advertisement -
Homeபொழுதுபோக்குஏம்பா… இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப் போறது இந்த டைரக்டரா? - இசைஞானி கையில்...

ஏம்பா… இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப் போறது இந்த டைரக்டரா? – இசைஞானி கையில் துப்பாக்கி கொடுத்துடுவாரோ? – குழப்பத்தில் தவிக்கும் ரசிகர்கள்

- Advertisement -

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் திரைப்படமாகிறது. பாவலர் சகோதரர்களாக பாஸ்கர், இளையராஜா, கங்கைஅமரன் ஆகியோர் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தது, கம்யூனிஸ்ட் கூட்டங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியது, இளையராஜா, கங்கை அமரன் சென்னைக்கு வந்தது, தமிழ் சினிமா இசை உலகில் இளையராஜா, இசைஞானியாக உயர்ந்தது வரை இதில், படமாக உருவாக்கப்படுகிறது.

இந்த படத்தில் இளையராஜாவாக நடிக்க இருப்பவர் நடிகர் தனுஷ். அவர்தான் இளையராஜாவாக நடிக்கப் போகிறார். கங்கை அமரன் கேரக்டரில் அவரே நடிப்பாரா, அல்லது வேறு யாரேனும் நடிப்பார்களா, இதில் மற்ற நடிகர்கள் குறிப்பாக ரஜினி, கமல் போன்றவர்கள் கேமியோ ரோல்களில் வருவாரா என்பது எல்லாம் இன்னும் முடிவாகவில்லை.

- Advertisement -

இதற்கிடையே இந்த படத்தை இளையராஜாவின் தீவிர ரசிகரான இயக்குநர் பால்கி, இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் இளையராஜா, இந்த படத்தை ரசிகரான ஒருவர் இயக்கினால் அதில் என்னை பற்றிய பெருமைகளை அதில் புகுத்தி விட வாய்ப்புள்ளது. அப்படி இல்லாமல் யதார்த்தமாக இருக்க வேண்டும். அதனால் இந்த படத்தை நானே தயாரிக்கிறேன். அதனால் படத்தின் இயக்குநரை நானே முடிவு செய்வேன் என்றும் கூறிவிட்டார்.

இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் என்பது, காலத்துக்கும் அழியாத ஒரு முக்கிய படமாக, தத்ரூபமாக இயக்கப்பட வேண்டும். அதனால் நல்ல இயக்குநர்களின் மூலம் இளையராஜா கதை எடுக்கப்பட வேண்டும். திரைக்கதையாக, கதையாக சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதால் அதில் தனுஷ்சும் அதிக கவனம் காட்டுகிறார். ஏனெனில் இளையராஜாவின் மிக தீவிரமான ரசிகர்களில் நடிகர் தனுஷூம் ஒருவர்.

- Advertisement -

இந்நிலையில் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குவதற்கான பரிந்துரைப்படி இரண்டு இயக்குநர்களை நடிகர் தனுஷே, இளையராஜாவிடம் அனுப்பி இருக்கிறார். ஒருவர் மாரி செல்வராஜ். தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கியவர். அடுத்து அருண் மாதேஸ்வரன் இவர், கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய இயக்குநர்.

அவர்கள் இரண்டு பேரிடமும், இளையராஜா மணிக்கணக்கில் அமர்ந்து பேசியுள்ளார். ஆனால் அவர் இன்னும் யார் இயக்குநர் என்பதை முடிவு செய்யவில்லை. மாரி செல்வராஜ், இளையராஜா படத்தை இயக்கினால் நிச்சயம் அது காலத்தால் அழிக்க முடியாத சிறந்த படமாக இருக்கும். ஆனால் ஆக்சன் பட டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இளையராஜா படத்தை எடுத்தால், அவரது கையில் ஆர்மோனியத்துக்கு பதிலாக துப்பாக்கியை கொடுத்து விடுவாரோ, என கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்