- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்ட் செய்த 3 படங்களுமே தோல்வி, அடுத்த படத்தை டைரக்ட் செய்ய அதிரடியாக ரெடியான ஐஸ்வர்யா...

டைரக்ட் செய்த 3 படங்களுமே தோல்வி, அடுத்த படத்தை டைரக்ட் செய்ய அதிரடியாக ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – இந்த படத்துல ஹீரோ இவரா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் படம் எப்போது வரும், எப்போது வரும் என்று ரசிகர்கள் ஏங்கித் தவித்த காலங்கள் என்பது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. ஏனெனில் அப்போது ரஜினி 2, 3 ஆண்டுகளுக்கு ஒரு படம்தான் நடிப்பார். உடனுக்குடன் படங்களில் நடிக்க மாட்டார். ஆனால், கபாலி படத்துக்கு பிறகு அடுத்தடுத்த படங்கள் என்ற டிரண்டுக்கு மாறிவிட்டார்,

அப்படி ரஜினிகாந்த் படம் எப்போது வரும் என்ற எதிர்பார்த்த ரசிகர்கள் ஒருபுறம் இருந்த அந்த காலகட்டமே இப்போது மாறிவிட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், இவர் எதற்கு படம் எடுத்து ரசிகர்களை கஷ்டப்படுத்துகிறார் என்று நினைக்கும் அளவுக்கு, அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடவடிக்கை இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே தனுஷ் – ஸ்ருதிஹாசனை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படம் மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது. இதன்பிறகு கவுதம் கார்த்திக் ஹீரோவாக வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 2வது படம் வை ராஜா வை படம் மிக மோசமான தோல்வியை தழுவியது. இந்த இரண்டு படங்களுமே பிளாப் ஆனதால் சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார் ஐஸ்வர்யா.

அதன்பிறகு கணவர் தனுஷை விட்டு பிரிந்த நிலையில், மீண்டும் டைரக்ட் செய்கிறேன் என, துள்ளி எழுந்த அவர் லால் சலாம் என்ற படத்தை, லைகா புரடக்சன் தயாரிப்பில் இயக்கினார். இதில் ரஜினியும் கேமியோ ரோலில், மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்தார். இந்த படம் ரஜினி ரசிகர்களே பார்க்க முடியாத அளவுக்கு மொக்கை படமாக பிளாப் ஆகி விட்டது.

- Advertisement -

இப்படி தொடர்ந்து 3 படங்களை இயக்கி, 3 படங்களுமே பயங்கர தோல்வி அடைந்த நிலையில் இருக்கும்போது, லால் சலாம் படம் வெற்றியடையாமல் போக, படத்தை நல்ல விதமாக பிரமோசன் செய்யவில்லை என்று தயாரிப்பாளரிடம் புகார் கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா. லைகா புரடக்சன்ஸ், ரஜினி நடித்து, ஏஆர் ரகுமான் இசை என்று 3 மெகா விஷயங்களை தாண்டி ரசிகர்கள் படம் குறித்து தரும் பாசிட்டிவ் விமர்சனம், பிரமோ தான் படத்துக்கு வெற்றியை கொடுக்கும் என்பதை மறந்திருக்கிறார் ஐஸ்வர்யா.

ரசிகர்களுக்கு பிடிக்காத, ரசிகர்கள் விரும்பாத ஒரு படத்தை யாருமே பாராட்ட முடியாது என்ற நிலையில் லால் சலாம், பிளாப் ஆகி மொய்தீன் பாய் மொக்கை ஆக காரணமே, படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். இந்த சூழலிலும் அடுத்த படத்தை டைரக்ட் செய்ய தயாராகி இருக்கிறார் ஐஸ்வர்யா. படத்தின் ஹீரோ சித்தார்த் என்று கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் குறித்து ஐஸ்வர்யா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

- Advertisement -

சற்று முன்