நடிகர் விஜய் சேதுபதி நடித்த சில படங்கள், கடந்த சில ஆண்டுகளாக சரியாக வெற்றிப் பெறவில்லை. சமீபத்தில் பொங்கல் ரிலீஸ் ஆக வெளிவந்த மெரி கிறிஸ்துமஸ் படமும், மாபெரும் பிளாப் படமாக இருந்தது. எனினும் தொடர்ந்து சில படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறார்.
இப்போது மிஷ்கின் டைரக்ஷனில் டிரெயின் என்ற படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்கான செட் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. தற்போது 3 மாதங்களுக்கு மேலாக டிரெயின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கேமியோ ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் டைரக்டர் மிஷ்கின் படப்பிடிப்பை காலை 6 மணிக்கு துவக்கினால், மாலை 6 மணிக்கு முடிக்க வேண்டும். ஆனால் மிஷ்கின் துவக்கும் நேரத்தை மட்டுமே சரியாக செய்கிறார். மாலை 6 மணி என்பதை திடீரென இரவு 9 மணியாக்கி விடுவார். திடீரென இரவு 2 மணி வரை படப்பிடிப்பை தொடருங்கள் என்று கூறிவிடுவார்.
இப்படி படப்பிடிப்பு நேரத்தை மிஷ்கின் அவர் இஷ்டப்படி மாற்றுவதால் படப்பிடிப்பு குழுவினருக்கு எக்ஸ்ட்ரா பேட்டா கிடைக்கிறது. ஆனால் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்குதான் பெரிய பாதிப்பாக இருந்து வருகிறது. இதை மிஷ்கினிடம் சொல்ல முடியாமல் விஜய் சேதுபதி தினமும் தவித்து வருகிறார்.
இப்போது விஜய் சேதுபதி விடுதலை 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் மகாராஜா என்ற படத்திலும் நடித்துள்ளார். அதுபோக மற்றொரு படம் என 3 படங்களுக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேச வேண்டியுள்ளது. ஆனால் விஜய் சேதுபதிக்கு நேரமே தராமல், இப்படி மிஷ்கின் டிரெயின் ஷூட்டிங்கில் இருக்க செய்து விடுவதால், டப்பிங் பேச முடியாமல் தினமும் அப்செட் ஆகி விடுகிறார் விஜய் சேதுபதி.





