நடிகர் சிலம்பரசன், தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள முக்கிய நடிகராக இருக்கிறார். பல வெற்றிப் படங்களை தந்த சிம்புவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பல படங்கள் தோல்வியை தந்துவிட்டன. எனினும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த படத்துக்கு பிறகு வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் சிம்பு நடித்தார். இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. அந்த படங்களில் ஓரிரு பாடல்கள் மட்டுமே ஹிட் ஆகின. அதன்பிறகு கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிம்பு கமிட் ஆனார்.
தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்யும் இந்த படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகள் பல மாதங்களாக போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால் படத்தின் ஷூட்டிங் இன்னும் துவங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் சில மாதங்களாக துபாயில் முகாமிட்டுள்ள சிம்பு, தமிழ்நாட்டுக்கே இன்னும் வராமல் இருக்கிறார். படப்பிடிப்பும் இன்னும் துவங்கவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த சூழலில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் தியாகராஜன், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் ஆகியோரை சிலம்பரசனே போனில் அழைத்து பேசி இருக்கிறார். உங்களை போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்றும் பேசியிருக்கிறார்.
சிலம்பரசனே இப்படி போன் செய்து பேசுகிறாரே, படத்தில் நடிக்க சம்மதம் சொல்கிறாரே என உச்சி குளிர்ந்த போன தயாரிப்பாளர்கள், சிலம்பரசனுடன் பல விஷயங்களை பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில், அவர்களது தயாரிப்பில் நடிக்க தனது சம்பளம் குறித்து தெரிவித்துள்ளார் சிம்பு. அதைக்கேட்ட தயாரிப்பாளர்கள் இருவருமே, அப்படியே ஆணியடித்தது போல திகைத்திருக்கின்றனர்.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றிக்கு காரணம் சிம்பு மட்டுமே அல்ல. அந்த படத்தில் நடித்த நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவின் அந்த அட்டகாசமான நடிப்பும் காரணம். அந்த நிலையில், இப்படி ஒரு மிக அதிகப்படியான சம்பளத்தை கேட்கிறாரே, என எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளனர். ஒருவேளை இவ்வளவு சம்பளம் கேட்டால் , தயாரிப்பாளர்கள் தர முன்வருகிறார்களா, என டெஸ்ட் பண்ணியிருப்பாரோ என்றும் பேச்சு அடிபடுகிறது.





