நடிகை நயன்தாரா, கேரளாவில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர்.துவக்கத்தில் டிவி சேனல் ஒன்றில் காம்பியராக பணிபுரிந்த அவர், பிறகு மனசினகாரே என்ற படத்தில் 2003ம் ஆண்டில் நடித்தார். இந்த படத்தின் இயக்குநர்தான், டயானா மரியா குரியன் என்ற அவரது பெயரை, நயன்தாரா என மாற்றினார். மலையாளத்தில் ஒரே படத்தில் நடித்த நயன்தாரா, பிறகு தமிழில் நடித்தார்.
2005ம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். குறிப்பாக சந்திரமுகி, யாரடி நீ மோகினி, கள்வனின் காதலி, வல்லவன், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், அறம் போன்ற படங்களால் லேடி சூப்பர் ஸ்டார் இடத்துக்கு வந்துவிட்டார்.
டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நயன்தாரா, வாடகைத்தாய் மூலம் உலக், உயிர் ஆகிய 2 ஆண் பிள்ளைகளுக்ககும் தாயானார். இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார்.
இயக்குநர் அட்லி இயக்கத்தில், இந்தியில் ஜவான் என்ற படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்தார். இந்த படம் 1150 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் தொடர்ந்து இந்தியில் பட வாய்ப்புகள் வரவில்லை. அதே போல் தமிழில் அவரது 75வது படம் அன்னபூரணி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் மார்க்கெட் சரிவடைந்து சற்று பின்னடைவில் இருக்கிறார் நயன்தாரா.
இதற்கிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா ஒரு பதிவு செய்திருக்கிறார். அதில் வேலையில் இருக்கும் நான், வெளியில் இருக்கும் நான், வீட்டில் இருக்கும் நான், முற்றிலும் மாறுபட்ட மூன்று நபர்தான். நாங்கள் ஒரே மாதிரி இல்லை என்ற பதிவை செய்துள்ளார். வழக்கமான தனது, கணவர் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படங்களை பதிவிடும் நயன்தாரா, இப்படி ஒரு பதிவை செய்துள்ளார்.
வீட்டில் தனிமையில் இருக்கும்போது ஒரு மனநிலை, மற்றவர்களுடன் பணிபுரியும்போது ஒரு மனநிலை, வெளியில் பொதுஇடங்களில் இருக்கும்போது ஒரு மனநிலை என்பது, எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். அந்த நேரங்களில் முற்றிலும் மாறுபட்ட மனிதர்களாக தான் அனைவருமே இருப்பார்கள். இதில் நாங்கள் ஒரே மாதிரி இல்லை என்ற நயன்தாரா பதிவிட்டிருப்பது, சமீபத்தில் அந்நியன் படம் பார்த்திருப்பாரோ, என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.





