- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்டர் பாலா படத்தில் நடிகர் சரத்குமார் மனைவி, அந்த கேரக்டரில் நடிக்க டிப்ஸ் கொடுத்தது…?...

டைரக்டர் பாலா படத்தில் நடிகர் சரத்குமார் மனைவி, அந்த கேரக்டரில் நடிக்க டிப்ஸ் கொடுத்தது…? – சஸ்பென்ஸ் உடைத்த சாயாதேவி

- Advertisement -

நடிகர் சரத்குமார் நடிக்க வருவதற்கு முன்பு, மும்பையில் சில ஆண்டுகள் இருந்தார். மிஸ்டர் மெட்ராஸ் என்ற ஆணழகன் போட்டியில் 1990களில் வென்றவர் சரத்குமார் என்பது பலருக்கும் தெரியாது. மும்பையில் இருந்த போது அவர், சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அதன்பிறகு புலன்விசாரணை படம் மூலமாக சரத்குமாரை வில்லன் கேரக்டரில் நடிக்க வைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் இந்த படத்தில் வில்லன் டாக்டராக நடித்தால் நன்றாக இருக்குமா, என படத்தின் டைரக்டர் ஆர்கே செல்வமணியிடம் கேட்டவரே விஜயகாந்த் தான். அதன்பின்பே அந்த கேரக்டரில் சரத்குமார் நடித்தார். இதை சரத்குமாரே ஒரு மேடையில் கூறினார்.

- Advertisement -

நடிகர் சரத்குமார், தன் மனைவி சாயா தேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனாலும் வரலட்சுமி தன் தாயிடமும் இருப்பார். சரத்குமாருடனும் இருந்தார். தம்பதிகள் பிரிவில், மகள் வரலட்சுமியை இருவருமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கவில்லை.

சூரிய வம்சம் படத்தில் நடித்த பிறகு, நடிகை ராதிகாவை சரத்குமார் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அதற்கு முன்பே முதலில் மீனாவின் அம்மாவிடமும், 2வதாக தேவயானியின் அம்மாவிடமும் பெண் கேட்டு இருக்கிறார் சரத்குமார். ஆனால் நீங்கள் ஏற்கனவே திருமணமானவர். வயது வித்யாசமும் அதிகமாக உள்ளது என, மீனா மற்றும் தேவயானி இருவரது அம்மாக்களுமே மறுத்துவிட்டதால், கடைசியில் ராதிகாவை 2வது மனைவியாக சரத்குமார் கரம்பிடித்தார்.

- Advertisement -

இந்நிலையில் ராதிகாவும், சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவியும் நாளடைவில் நெருங்கிய நண்பர்களாகி விட்டதால், இருவருமே வீடுகளுக்குச் செல்வது, குடும்ப விழா நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது என சகஜமாக இருக்கின்றனர். இப்போது சாயாதேவியும் நடிக்க துவங்கிவிட்டார். இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் சாயாதேவி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நேர்காணல் ஒன்றில் சாயாதேவி கூறுகையில், எனது குடும்ப நண்பர் கேட்டுக்கொண்டதால், இந்த படத்தில் நடித்தேன். எனது கேரக்டர் மிகவும் சூப்பராக இருந்ததால் நடிக்க ஒத்துக்கொண்டேன். எனக்கு நடிக்க தெரியாது. அதனால் என் மகள் வரலட்சுமியிடம்தான் நடிப்பது குறித்து டிப்ஸ் கேட்டு தெரிந்துக்கொண்டேன். அவள் சிங்கிள் டேக் நடிகை என்று பெயர் வாங்கியவள். படத்தின் கதை, என் கேரக்டர் குறித்து எதுவும் சொல்ல முடியாது. நீங்கள் ரசிக்கும் கதையாக கண்டிப்பாக வணங்கான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் சாயாதேவி.

- Advertisement -

சற்று முன்