- Advertisement -
Homeபொழுதுபோக்கு32 ஆண்டுகளுக்கு பிறகு குணா படம் பற்றி வெளிவந்த ஒரு உண்மை தகவல் - அட...

32 ஆண்டுகளுக்கு பிறகு குணா படம் பற்றி வெளிவந்த ஒரு உண்மை தகவல் – அட அப்பவே கமல்ஹான் அந்த கடையை திறந்துட்டாரா? – இது நமக்கு தெரியலையே!

- Advertisement -

கடந்த 1991ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான படம் குணா. தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், ரோஷினி, ஜனகராஜ், எஸ். வரலட்சுமி, எஸ்.பி பாலசுப்ரமணியம், ரேகா, கிரிஷ் கர்னாட், அஜய் ரத்னம், சரத் ஷக்சேனா, காகா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தை சந்தானபாரதி இயக்கியிருந்தார். கமல் படங்களில் இந்த படம் மிக முக்கியமான படமாக இருந்தது. இந்த படத்தின் பெரும்பாலான படக்காட்சிகள், கொடைக்கானல் மலையில் எடுக்கப்பட்டது. அங்குள்ள குகையில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டதால், அதற்கு குணா குகை என்றே பெயர் அமைந்துவிட்டது. இப்போது அங்கு செல்லும் சுற்றுலாவாசிகள், குணா குகையை ஒரு அதிசயமாக பார்வையிட்டு, புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.

- Advertisement -

கமல்ஹாசன் குணா என்ற கேரக்டரில் மனநலம் பாதித்த இளைஞராக நடித்திருப்பார். அவரது அம்மா எஸ். வரலட்சுமி. நடிகை ரேகா பாலியல் தொழிலாளியாக இருப்பார். தொழிலதிபர் மகளாக ரோஷினி நடித்திருப்பார். டாக்டராக கிரிஷ் கர்னாட், வில்லனாக சரத் ஷக்சேனா, போலீஸ் அதிகாரியாக எஸ்பி பாலசுப்ரமணியம் நடித்திருப்பார்.

இந்த படம் அப்போது ஒரு தரப்பு கமல் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டாலும், பெரும்பாலான ரசிகர்கள் படத்தை ரசிக்கவில்லை. எனினும், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இசை நிகழ்ச்சிகளில் கமல் மற்றும் இதர பாடகர்கள் அந்த பாடல்களை பலமுறை பாடியிருக்கிறார்.

- Advertisement -

இப்போது இதே குணா படம் குகையை மையமாக வைத்து, மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாள படம் ரிலீஸ் ஆகிய ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த 22ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், 7 நாட்களில் மொத்தம் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. வரும் நாட்களில் மிக எளிதாக 100 கோடி ரூபாயை கடந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 32 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த குணா படம் பற்றிய ஒரு உண்மை தகவலும் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது 1989ல் வெளியான டைம் மி அப் டைம் மி அப் டவுன் என்ற ஆங்கில படம் ஒன்றின் அப்பட்டமான காப்பி என்பதும், அப்போதே பல ஹாலிவுட் படங்களின் காட்சியை, கதைகளை கமல்ஹாசன் தனது படங்களில் பயன்படுத்தி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு படம்தான் குணாவும். அப்போதே கமல்ஹாசன், ஜெராக்ஸ் கடையை திறந்துவிட்டார் கமல்ஹாசன் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்