- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் போலீஸ் ஸ்டோரியை வேறொரு பார்வையில் காட்டிய இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி... வரவர இவர்...

தமிழ் சினிமாவில் போலீஸ் ஸ்டோரியை வேறொரு பார்வையில் காட்டிய இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி… வரவர இவர் செலக்சன் வேற லெவல்ல இருக்கேப்பா…

- Advertisement -

நடிகர் கார்த்தி தற்போது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இது அவரின் 25வது திரைப்படமாக உருவாகி இருந்தது. இப்படியான சூழலில் தனது 26வது திரைப்படத்தில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் கார்த்தி இணைந்திருக்கிறார்.

இதில் கார்த்தியுடன் ராஜ்கிரண் சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதில் கார்த்தி எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட அப்டேட் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் உள்ளது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து தனது 27 வது திரைப்படத்தையும் நடித்து முடித்து இருக்கிறார் கார்த்தி. இதனை 96 படத்தை எடுத்த பிரேம் குமார் இயக்கியுள்ளார். முதல் திரைப்படத்தை முழுக்க முழுக்க காதல் காவியமாக எடுத்த பிரேம்குமார் இதில் குடும்பத்தை மையமாக வைத்து கதையை இயக்கி இருக்கிறார்.

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கார்த்திக்கு சகோதரியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறாராம். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு மெய்யழகன் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரவிந்த்சாமிக்கு முக்கியமான கதாபாத்திரத்தை இயக்குனர் பிரேம்குமார் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் பிறகு 28 வது படமாக சர்தார் 2 படத்தில் கார்த்தி நடிக்கிறார். ஏற்கனவே இதன் முதல் பாகம் ஓரளவு பேசப்பட்டதால், அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் கார்த்தி முடிவெடுத்துள்ளார். இதன் பிறகு அவர் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் டானாகாரன் இயக்குனர் தமிழுடன் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. காவலருக்கான பயிற்சியில் இருக்கும் சமூக அரசியலையும், அங்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் டானா காரன் திரைப்படம் மூலம் தோலுரித்துக் காட்டி இருந்தார் இயக்குனர் தமிழ். இப்படியான சூழலில் அவரது கதையை கார்த்தி தேர்ந்தெடுத்து இருக்கிறார். இது திரைப்படம் 1960களில் நடைபெறும் கேங்ஸ்டர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்