- Advertisement -
Homeபொழுதுபோக்குகணவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நயன்தாரா... கடைசில என்னதான் சொல்ல வர்றாங்க... ஒன்னுமே புரியலையே...

கணவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நயன்தாரா… கடைசில என்னதான் சொல்ல வர்றாங்க… ஒன்னுமே புரியலையே…

- Advertisement -

நடிகை நயன்தாராவிற்கு கடந்த ஆண்டு திரையுலகை பொருத்தவரை சோகமான காலமாகவே அமைந்தது. அவர் நடித்த எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. ஜவான் திரைப்படம் மூலம் அவர் இந்தியில் அறிமுகமானாலும், அது நயன்தாராவுக்கு ஒரு பிளாட்பார்மாக ஏற்படவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க அவர் நடித்த அன்னபூரணி திரைப்படமும் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. அதில் பிராமண சமூகத்தை சாடி நிறைய வசனங்கள் இருப்பதாக கூறப்பட்டது. திரையரங்குகளில் அந்த திரைப்படம் ஓடாத நிலையில் ஓடிடியில் வந்ததும் பிரச்சனை எழுந்தது.

- Advertisement -

நயன்தாராவுக்கு எதிராக மகாராஷ்டிராவில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர். சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமும் மன்னிப்பு கோரி படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

இப்படி பிரச்சனை பூதாகரமாக வெடிக்க பகிரங்கமாக மன்னிப்பு கூறினார் நடிகை நயன்தாரா. அது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ஜெய் ஸ்ரீ ராம் என்று குறிப்பிட்டார். இப்படியாக அந்த பிரச்சனையை முடிவுக்கு வர, தற்போது மண்ணாங்கட்டி திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். விரைவில் இந்த பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே நயன்தாராவுக்கும் அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் வலைதளத்தில், நயன்தாரா தொடர்பான டேக்குகளை நீக்கியதாக தெரிகிறது. இப்படி இருக்க நயன்தாராவும் நேற்று தகுதி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், அனைத்தையும் இழந்து விட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இணையத்தில் இது தீயாய் பரவ சிறிது நேரத்தில் அதை அவர் நீக்கினார். இதைக் கண்ட பலரும் ஒருவேளை உண்மையிலேயே கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இருக்கிறது போல எனக்கு கமெண்ட் செய்து வந்தனர். இப்படியான சூழலில் தனது எக்ஸ் வலைதளத்தில் நயன்தாரா புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் விக்கி கிளிக்ஸ் என தனது கணவர் பெயரை குறிப்பிட்டு அவர் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும், இதற்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்