- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்ஜே பாலாஜியும் இல்லே, கார்த்திக் சுப்பராஜூம் இல்லே, விஜய் 69 படத்தை இயக்கப் போவது இந்த...

ஆர்ஜே பாலாஜியும் இல்லே, கார்த்திக் சுப்பராஜூம் இல்லே, விஜய் 69 படத்தை இயக்கப் போவது இந்த இருவரில் ஒருவர்தான் – விஜய் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருக்கிறது. ரஷ்யாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் இந்த படப்பிடிப்பை முடித்த பிறகு, அடுத்த மாதம் மதுரையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

தற்போது விஜய் நடித்து வருவது, அவரது 68வது படம் என்ற நிலையில், அவரது 69 படம்தான் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்துடன் சினிமா நடிப்புக்கு முழுக்கு போடும் விஜய், அடுத்து முழு நேர அரசியல்வாதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அந்த பணிகளில் மட்டுமே ஈடுபட இருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நேற்று விஜய் அறிமுகம் செய்து வைத்த நிலையில், பல லட்சக்கணக்கான மக்கள், அவரது செயலில் தங்களை கட்சி உறுப்பினராக்கி கொள்ள ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன. இது விஜய் ரசிகர்களையும், தமிழக வெற்றிக் கழகம் சார்ந்த நிர்வாகிகளையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி கடந்த ஒரு மாதமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், அட்லி, கவுதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், ஆர்ஜே பாலாஜி, தெலுங்கு பட இயக்குநர் திரி விக்ரம் என பலரது பெயர்கள் அடிபட்டன. கடைசியாக ஆர்ஜே பாலாஜி, கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரிடம் விஜய் கதை கேட்டதாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தை, தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமாக ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தின் முதல் சாய்ஸ் ஆக இருப்பது டைரக்டர் திரிவிக்ரம்தான், அவரும் தெலுங்கு பட உலகை சேர்ந்தவர் என்பதால், தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் அவரை முன்னிறுத்துகிறது.

அதே வேளையில் சமீபத்தில் வலிமை, துணிவு, தீரன் அதிகாரம் 1 படங்களை இயக்குநர் எச் வினோத், நடிகர் விஜயை சந்தித்து ஒரு வரி கதையை சொல்லி இருக்கிறார். கேட்டவுடனே கதை பிடித்துவிட்டதாக விஜய் ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதில் விஜய் சற்று குழப்பத்தில் இருக்கிறார். படப்பிடிப்பில் பிஸியாகவும் இருக்கிறார். அதனால் இன்னும் 10 நாட்களில் இருவரில் யார் இயக்குநர் என்பதை முடிவு செய்து சொல்லி விடுவதாக தயாரிப்பு நிறுவனத்துக்கு உறுதி சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்