- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் 2ம் பாகம் படம் எடுக்க இதுதான் காரணமா? - அட...

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் 2ம் பாகம் படம் எடுக்க இதுதான் காரணமா? – அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் ஒரு படம் வெளிவந்தால் அதன்பிறகு அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருந்தாலும், மிகப்பெரிய தோல்வி படமாக இருந்தாலும் ஒரு காலகட்டத்துக்கு பிறகு அதை தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் யாருமே பொருட்படுத்த மாட்டார்கள். அடுத்தடுத்த படங்களில் தங்களது கவனத்தை செலுத்த துவங்கி விடுவர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படங்கள், 2ம் பாகங்களாக வெளிவருகின்றன. அதுமட்டுமின்றி இப்போது எடுக்கப்படும் பல படங்கள் இரண்டு பாகங்களாக எடுக்கப்படுகின்றன. இரண்டே கால் மணி நேரத்தில் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்ற நிலையில், எதற்காக 2 பாகங்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எம்ஜிஆர், சிவாஜி படங்கள் அந்த கால தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டவை. அந்த படங்களை மெருகுகேற்றி, புதிய வண்ணத்தில், சவுண்ட் எபெக்டில் டிஜிட்டல் தரத்தில் தருவது சிறப்பாக இருக்கும். அதை பார்க்கவும் ரசிகர்களுக்கு குதூகலம் ஏற்படும். அதே வேளையில் பல ஆண்டுகளுக்கு முன்வெளிவந்த படங்களை மீண்டும் 2ம் பாகமாக தருவது ஏன் என்பது ரசிகர்களுக்கு குழப்பம் தருகிறது.

இதற்கான காரணங்கள் இப்போது தெரிய வந்திருக்கின்றன. அதாவது, மெகாஹிட் படங்களாக பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதே வரவேற்பை இப்போதும் பெறும் ஆசையில், அதிக வசூல் என்ற நோக்கத்தில்தான் 2ம் பாக படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முன்வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி புதிய கதை களத்தில், புதிய ரசிகர்களுக்கு பிடித்தமான கதைகளை உருவாக்க, இன்றைய இயக்குனர்கள் பலரிடம் மண்டையில் சரக்கு இல்லை. கற்பனைத் திறன் இல்லை. அதனால் பழைய படத்தின் கதையுடன் சில விஷயங்களை தொடர்ச்சியாக கொண்டு வந்து, இப்போதுள்ள மாஸ் நடிகர்களை நடிக்க வைத்து ஒப்பேத்தி விடலாம் என்பதுதான் அவர்கள் நோக்கம்.

இரண்டாம் பாகமாக வெளிவந்த பல படங்கள் பிளாப் ஆகியிருக்கின்றன. இந்த நிலையில் இந்தியன் 2, இந்தியன் 3, புதுப்பேட்டை 2, வடசென்னை 2, டிமாண்டி காலனி 2, சூரியவம்சம் 2, ஜெயிலர் 2 என இந்த 2ம் பாக படங்கள் வரக் காரணமே, இயக்குனர்களிடம் அடுத்த கதைக்கான சரக்கு இல்லை என்பதுதான். இதற்கும் வாய்ப்பில்லாத லோகேஷ் கனகராஜ், அட்லி போன்ற இயக்குனர்கள், ஹாலிவுட், பாலிவுட் படங்களில் இருந்து கதையை காப்பியடித்து, மாஸ் ஹீரோக்களை நடிக்க வைத்து, தங்களது படைப்பு திறனை காட்டுகின்றனர். ஆக மொத்தத்தில், படைப்புத்திறனில், தமிழ் சினிமா முட்டுச்சந்தில் நிற்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

- Advertisement -

சற்று முன்