நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. நாளை கேரளாவில் திருவனந்தபுரத்தில் சில தினங்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தப்படுகிறது. இதில் விஜய் கலந்துக்கொள்கிறார். காவலன் படத்தில் நடித்த பிறகு, 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கோட் படத்தில் நடிக்க விஜய் கேரளா சென்றிருக்கிறார்.
இந்த படத்துக்கு பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை டைரக்ட் செய்யப் போகிற இயக்குநர் யார் என்பதில் பெரிய சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. இதில் இதுவரை பல பெயர்கள் அடிபட்டு விட்டன. சின்ன இயக்குநர்கள் முதல் பெரிய இயக்குநர்கள் வரை பலரும் விஜய் படத்தை இயக்க கதை சொன்னதாக தகவல் பரவி வருகிறது.
குறிப்பாக இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், அட்லி உட்பட பலருடைய பெயர் இதில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் உண்மையில் வெற்றிமாறன், ஷங்கர் எல்லாம் இதுகுறித்து விஜயிடம் ஒருமுறை கூட பேசவில்லை. ஏனெனில் இந்தியன் 2, இந்தியன் 3, கேம் சேஞ்சர் படங்களை டைரக்ட் செய்வதில் ஷங்கரும், விடுதலை 2 படத்தில் வெற்றிமாறனும் பிஸியாக இருக்கின்றனர்.
விஜய் தனது அடுத்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2026ம் ஆண்டு துவக்கத்திலோ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏனெனில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அந்த படம் வர வேண்டும் என்பதால் அரசியல் சார்ந்த படமாகவும் அது இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இப்போது விஜய் நடித்து வரும் வெங்கட்பிரபு படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகளோ, வசனங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் தனது 69வது படத்தை மிகவும் மாஸ் ஆன படமாக உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், கார்த்திக் சுப்பராஜ், கேங் ஸ்டா் கதையுடன் சென்றிருக்கிறார். அவர் வேண்டாம் என நிராகரித்து விட்டார். அடுத்து ஆர்ஜே பாலாஜி சொன்ன கதையில் விஜய் அதிருப்தியடைந்து அந்த கதையும் வேண்டாம் என ஒதுக்கியிருக்கிறார். ஆக இரண்டு டைரக்டர்களும் விஜய் 69 படத்தில் இல்லை.
இதற்கிடையே ஜெயம் ரவியை வைத்து சைரன் படத்தை டைரக்ட் செய்த டைரக்டர் ஆண்டனி பாக்யராஜூம் விஜயிடம் கதை சொல்லி, நோ சொல்லி விட்டார். திரிவிக்ரம் சொன்ன கதையிலும் விஜய்க்கு நிறைய முரண்பாடுகள் இருப்பதால் அதற்கும் நோ சொல்லும் முடிவில் விஜய் இருக்கிறார். ஆக 4 டைரக்டர்களை ரிஜக்ட் செய்த விஜய், அஜீத் நடிப்பில் வலிமை மற்றும் துணிவு படத்தை இயக்கி எச். வினோத்துக்கு வாய்ப்பளிக்க உறுதியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.





