நடிகை மும்தாஜ், தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா, ஷகிலா, குஷ்பு போல ஒரு கவர்ச்சி நடிகையாக தான் தமிழ் சினிமா ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அவர் ஒரு சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக வந்திருக்க வேண்டியவர். முன்னணி நடிகையாக அவர் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்க வேண்டியவர். ஆனால் விஜயுடன் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு தன் கேரியரை அவரே திசை மாற்றிவிட்டார்.
மோனிஷா என் மோனாலிஷா படத்தில் டி ராஜேந்தர் அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு திறமையான, நடிப்பாற்றல் உள்ள நடிகையாக மும்தாஜ் இருந்தும் அவருக்கான பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் வாய்ப்புக்காக அவர், கவர்ச்சி காட்ட பிறகு அதுவே அவரது திரைப்பயண வாழ்க்கையாகி விட்டது. தொடர்ந்து குத்தாட்ட பாடல்களில் மும்தாஜ் நடித்தார்.
தொடர்ந்து பட்ஜெட் பத்மநாபன், வேதம், உனக்காக எல்லாம் உனக்காக, சொன்னால்தான் காதலா, ஸ்டார், சாக்லேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்த மும்தாஜ், அத்தனை படங்களிலுமே கவர்ச்சி ரோல்களில் தான் நடித்தார். குறிப்பாக சாக்லேட் படத்தில், மல மல மல பாடலில் மும்தாஜின் குத்தாட்டம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
கடந்த பல ஆண்டுகளாக அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம், அவராகவே இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். மேலும் குர் ஆன் அவரது வாழ்வில் சில அர்த்தமுள்ள விஷயங்களை உணர்த்தியதாகவும் அதனால் இனிமேல் சினிமா வேண்டாம் என அவரே முடிவு எடுத்துவிட்டதாகவும் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
அதே போல், இப்போது நடிகை மும்தாஜூக்கு 42 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. இதுகுறித்து மும்தாஜ் கூறுகையில், எனக்கு இன்னும் திருமணமாகாமல் இருக்க காரணம், எனக்கு திருமணம் குறித்த யோசனையே இல்லை என்பதுதான். எனக்கு நிறைய ப்ரபோசல் வந்தது. எனக்கு திருமணம் குறித்த எண்ணமே இல்லாததால், இன்னும் எனக்கு திருமணமாகவில்லை.
நான் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. எனக்கும் காதல் வந்தது. நானும் ஒருவரை தீவிரமாக காதலித்தேன். ஆனால் அவரை திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லை. அதனால் திருமணம் குறித்து நான் யோசிப்பதே இல்லை. மேலும் எனக்கு ஆட்டோ இம்யூனி என்ற நோயும் இருந்தது. அதனால் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன் என்றும் மும்தாஜ் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.





