- Advertisement -
Homeபொழுதுபோக்குதுப்பறிவாளன் 2 படத்தை தயாரிக்க நடிகர் விஷால் போட்ட சூப்பர் பிளான், ஒர்க் அவுட் ஆகுமா...

துப்பறிவாளன் 2 படத்தை தயாரிக்க நடிகர் விஷால் போட்ட சூப்பர் பிளான், ஒர்க் அவுட் ஆகுமா – எல்லாம் சிங்கம் கையில்தான் இருக்கு!

- Advertisement -

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, முக்கிய நடிகராக ஒரு காலகட்டத்தில் இருந்தார். சண்டக்கோழி, திமிரு, செல்லமே, சிவப்பதிகாரம், நான் சிவப்பு மனிதன், துப்பறிவாளன், அவன் இவன் போன்ற பல நல்ல படங்களை கொடுத்தார். விஷால் படங்கள் என்றாலே மினிமம் கியாரண்டி என்னும் அளவுக்கு ஒரு சமயத்தில் அவரது படங்கள் இருந்தன.

ஆனால் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக விஷால் படம் எதுவுமே சரியாக போகவில்லை. அவரது நடிப்பில் வெளியான 10க்கும் மேற்பட்ட படங்கள் தொடர்ச்சியாக பிளாப் ஆகின. விஷால் படங்கள் என்றாலே, ரசிகர்களுக்கு பிடிக்காது என்று சொல்லும் அளவுக்கு அவரது படங்கள் ஏமாற்றத்தை தந்தன. அதை அவரது சொதப்பலான படங்களும் அதை நிரூபித்துவிட்டன.

இந்நிலையில் கடந்தாண்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. ஆனால் இந்த படத்தின் அமோகமான வெற்றிக்கு காரணம் அந்த படத்தில் நடித்த நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாதான் என்பதும் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை. எஸ்ஜே சூர்யா மட்டும் நடிக்காவிட்டால் மார்க் ஆண்டனியும் பிளாப் தான்.

இதற்கிடையே நடிகர் விஷால், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்த ரத்னம் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை டைரக்டர் ஹரி இயக்கி உள்ளார். சாமி, வேல், சிங்கம் படங்களை போல இந்த படம் பரபர என, வேற லெவலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களின் தியேட்டர் திரையிடும் உரிமையை, படத்தின் நாயகன் விஷாலே வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் ஹரி படம் என்பதால் தமிழ்நாட்டில் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பை பெறும். ஆந்திராவில் விஷால் நடித்த மசாலா படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்போது துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி, தயாரித்து நடிக்க விஷால் ஆயத்தமாகி வருகிறார். எனவே, அந்த படத்தை தயாரிக்க தேவையான லாபத்தை சம்பாதிக்க, ரத்னம் படத்தை வினியோகஸ்தராக மாறி தமிழ்நாடு, ஆந்திரா தியேட்டர்களில் திரையிடுகிறார். விஷால் போட்டிருக்கும் சூப்பர் பிளானை சக்சஸ் பண்ணுவது, டைரக்டர் ஹரியின் ரத்னம் படத்தின் வெற்றியில்தான் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

சற்று முன்