நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது தமிழக மக்களின் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது. பாஜக பிரதமராக வாஜ்பாய் இருந்த காலகட்டத்தில், அவருக்கு ஆதரவு தந்து வாஜ்பாய் அழைப்பு விடுத்தார். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு சம்மதிக்கவில்லை. பலமுறை ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் அவர் ஏற்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறேன். நான் கட்சியின் காவலனாக மட்டுமே இருப்பேன். கட்சியை வழிநடத்துவேன். அரசியல் பொறுப்புகளுக்கு வரமாட்டேன். ஆனால் ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றால் ஆட்சியாளரை நானே வெளியேற்றுவேன் என்றெல்லாம் பேசிய ரஜினிகாந்த், பிறகு தமிழ்நாட்டில் புரட்சி வெடித்தால், நான் அரசியலுக்கு வருகிறேன் என பின்வாங்கினார்.
ஆனால் நடிகர் விஜய், அரசல் புரசலாக தான் அரசியலுக்கு வருகிறார் என்று பேசப்பட்ட நிலையில், திடீரென தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியின் பெயரை அறிவித்தார். நிர்வாகிகளை தேர்வு செய்தார். கட்சியில் உறுப்பினராக சேர செயலியை அறிமுகப்படுத்தினார். அடுத்த மாதம் ஏப்ரலில் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த இருக்கிறார்.
விஜய் கட்சி துவங்கியதில் இருந்தே பலரும் ரஜினியை விஜயுடன் ஒப்பிட்டு வசைபாட துவங்கி விட்டார். கடைசி வரை அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என தன் ரசிகர்களை ஏமாற்றி, தன் படங்களை வெற்றி பெறச் செய்த ரஜினியை விட, தன் ரசிகர்களுக்காக, மக்களுக்காக சினிமாவை விட்டு வெளியறேி வந்த விஜய்தான் உண்மையில் சிறந்த மனிதர் என பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவரை சந்தித்த ரஜினிகாந்த், விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து நீண்ட நேரம் விசாரித்து இருக்கிறார். விஜய்க்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு, தொகுதிகளில் அவருக்கு ஓட்டு கிடைக்குமா, எதிர்கால அரசியலில் அவர் வெற்றி பெறுவாரா, அவர் தமிழக முதல்வராக வர வாய்ப்புள்ளதா, என பல விஷயங்களை துருவி துருவி கேட்டிருக்கிறார்.
30 நிமிடங்களுக்கு மேல் விஜய் அரசியல் குறித்தே கேட்டுக்கொண்டிருந்த ரஜினிகாந்த், இறுதியில் விஜய் நல்ல பையன். அவர் அரசியலில் ஜெயிக்க வேண்டும். அதற்காக தான் இதெல்லாம் கேட்டேன் என்றும் ஹைலைட்டாக பேசியிருக்கிறார். என்னதான் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கே பஞ்சாயத்து செய்தவர், நாளை முதலமைச்சரும் ஆகி விட்டால் என்ன செய்வது, என்ற பதைபதைப்பு தலைவருக்கு வந்துவிட்டதாக விஜய் ரசிகர்கள் இப்போதே கலாய்க்க துவங்கி விட்டனர்.





