- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த கேரக்டரில் நடிப்பது, எனக்கு ஒரு சவால்தான் - அதற்காகவே இந்த சீரியலில் நடிக்கிறேன் -...

இந்த கேரக்டரில் நடிப்பது, எனக்கு ஒரு சவால்தான் – அதற்காகவே இந்த சீரியலில் நடிக்கிறேன் – கெத்தாக ஸ்டேட்மென்ட் விட்ட வேலா ராமமூர்த்தி

- Advertisement -

துவக்கத்தில் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக, அதற்கு பின் இயக்குநர் வசந்த் திடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரிமுத்து. கண்ணும், கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய படங்களை இயக்கிய அவர், பின்னாளில் சினிமாவில் நடிக்க துவங்கினார். கொம்பன், மருது, கோலமாவு கோகிலா, ஜெயிலர் என பல படங்களில் நடித்தார். சின்ன கேரக்டர்களில் நடித்தாலும், அவரது யதார்த்தமான நடிப்பும், பேச்சும் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

எனினும் அவர் தமிழக மக்கள் மனதில் அதிகமாக இடம்பிடித்தது, எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில்தான். அந்த சீரியல் பார்த்தவர் மனங்களில் அப்படியே போய் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டார் மாரிமுத்து. ஆனால், அவரது நடிப்பை ரசித்த லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றிவிட்டு திடீரென இந்த மண்ணை விட்டு மறைந்து போனார்.

- Advertisement -

இப்போது ஆதிகுணசேகரன் கேரக்டரில், நடிகர் வேலா ராமூர்த்தி நடிக்கிறார். இவரும், சினிமாவில் சிறந்த நடிப்பை தந்து வரும் குணச்சித்திர நடிகர்தான். வில்லன் கேரக்டரிலும் அசத்துவார். தந்தை வேடத்திலும் சிறந்த நடிப்பை தருவார். தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் வேலா ராமமூர்த்தி, இந்த சீரியலில் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் வேலா ராமமூர்த்தி கூறியதாவது, நான் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இன்னும் முழுநேர நடிகனாகவில்லை. வாய்ப்பு வந்தால் மட்டுமே, என்னை அழைத்தால் மட்டுமே சென்று நடித்துக்கொடுக்கிறேன். ரம்யாகிருஷ்ணன், ராதிகா போன்றவர்கள் என்னை சீரியலில் நடிக்க அழைத்த போது, சினிமா மட்டுமே என் இலக்கு என்பதால் மறுத்து விட்டேன்.

- Advertisement -

கொம்பன் படத்தில் நடித்த போது, மாரிமுத்து என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. அப்போது, புலிவால், கண்ணும் கண்ணும் என்ற இரண்டு படங்களை எடுத்து மிகவும் கஷ்டப்பட்டேன்.இப்போது எந்த கஷ்டமும் இல்லாமல் நன்றாக இருக்கிறேன், என்றார். அடுத்த முறை அவரை பார்த்தபோது, எதிர் நீச்சல் சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். ரொம்ப உச்சத்தில் இருக்கிறேன் என சந்தோஷப்பட்டார். கடைசியாக ஒருமுறை என்னுடன் காரில் பயணித்து, இறங்கி சென்றார். அதற்கு பிறகு சந்திக்கவில்லை. அதுவே கடைசி சந்திப்பாகி விட்டது.

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து மாரிமுத்து பெரிய கொடியை நட்டி சென்றுள்ளார். அவர் சென்ற இடங்களில் எல்லாம், பெண்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். என் வீட்டில் உள்ள பெண்கள் கூட அவரை பற்றி பெருமையாக பேசுவார்கள். நானும் வீட்டுக்குள் அந்த சீரியல் ஓடும்போது யதேச்சையாக பார்ப்பேன். முழுமையாக இப்போதுதான் பார்த்தேன்.

ஒரு நடிகனாக நான், அந்த கேரக்டரில் நடிப்பதை சவாலாகவே எடுத்துக்கொண்டு, இதில் நடிக்க சம்மதித்து இருக்கிறேன். சினிமாவில் நான் நடிக்கும் கேரக்டர்களையும் அப்படித்தான் சவாலாக நினைப்பேன். மக்கள் மனங்களில் இடம்பிடிப்பது அவ்வளவு சாதாரணமல்ல. இந்த முகத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் அது சாத்தியம். சினிமாவில் என்னை ஏற்றுக்கொண்டனர். சீரியலிலும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தொடர்ந்து சீரியலில் நடிக்க மாட்டேன். இந்த கேரக்டரில் என் திறமையை நிரூபிக்க நடிக்கிறேன், என்று கூறியிருக்கிறார் வேலா ராமமூர்த்தி.

- Advertisement -

சற்று முன்