- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் ஜோதிகாவுக்கு நிஜ வில்லியாக மாறியது நடிகை பிரியாமணியா? - அட இப்படி ஒரு...

அந்த விஷயத்தில் ஜோதிகாவுக்கு நிஜ வில்லியாக மாறியது நடிகை பிரியாமணியா? – அட இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கா?

- Advertisement -

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக அற்புதமான நடிகைகளில் ஒருவராக தான் இன்று வரை கவனிக்கப்படுகிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆக தாமதமான நிலையில், வாலி படம் வெளியானது. அஜீத் நடித்த வாலி படத்தில் கேமியோ ரோலில் ஜோதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகி சிம்ரன்தான்.

வாலி படத்தில் சில காட்சிகளே வந்தாலும் ஜோதிகா ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அடுத்து காக்க காக்க படத்தில் மாயா கேரக்டரில் நடித்த போது சூர்யாவின் மனம் கவர்ந்த நாயகியானார். பிறகு சில ஆண்டுகள் காதலித்த அவர்கள், பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்துக்கொண்டனர்.

- Advertisement -

ஜோதிகா – சூர்யாவை திருமணம் செய்யும் முன்பு, பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார். குறிப்பாக சந்திரமுகி, பேரழகன், தெனாலி, டும் டும் டும், தூள், குஷி, திருமலை, ப்ரியமான தோழி, சில்லுனு ஒரு காதல், மாயாவி என பல படங்களில் ஜோதிகாவின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. குறிப்பாக சந்திரமுகி படத்தில் அவரது நடிப்பு மிரட்டலாக அமைந்தது.

திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா, இப்போது மீண்டும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். அஜய் தேவ்கன் ஜோடியாக இந்தியில் ஜோதிகா நடித்த சைத்தான் படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இதில் மாதவன் வித்யாசமான கேரக்டரில் நடித்திருந்தார். மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த காதல் தி கோர் படமும், மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த வெற்றிப்படமாக இருந்தது.

- Advertisement -

ஜோதிகா நடித்த படங்களில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம்தான் மொழி. ராதா மோகன் இயக்கிய இந்த படத்தில் காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் ஜோதிகா மிக அற்புதமான நடிப்பை தந்திருந்தார். பிருத்விராஜ், பிரகாஷ் ராஜ், ஸ்வர்ணமால்யா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு முக்கிய படமாக இருந்தது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஜோதிகா, மொழி படம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், மொழி படத்தில் காது கேட்காத, வாய் பேசாத பெண்ணாக நடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. மொழி படத்துக்காக தேசிய விருதுக்கு நாமினேட் ஆன நான், ஒரே ஒரு ஓட்டில் சிறந்த நடிகை தேசிய விருது பெறும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என வருத்தப்பட்டு கூறியிருந்தார். இதே 2007ம் ஆண்டில், பருத்திவீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்ததற்காக, பிரியாமணி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்