- Advertisement -
Homeபொழுதுபோக்குத கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் விஜய் படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம் - பேராசைப்பட்ட தயாரிப்பு...

த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் விஜய் படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம் – பேராசைப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு இப்படி ஆகிப் போச்சே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பு இப்போது, திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு இந்த படத்தை இயக்கி வருகிறார். அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. பிரசாந்த், மைக் மோகன் போன்றவர்கள் பல ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபுதேவா, சுதீப், கஞ்சா கருப்பு, அஜ்மல், வைபவ், லைலா, ரம்யாகிருஷ்ணன், கனிகா என பலர் நடித்துள்ளனர். இந்த மாதம் 31ம் தேதியுடன் இதன் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

புதிய படங்களின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கிக்கொள்ளும் ஓடிடி தள நிறுவனங்கள், சமீபகாலமாக ரேட்டை கணிசமாக குறைத்துவிட்டன. இதனால் பல படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருந்தும், ஓடிடி உரிமம் விற்பனை ஆகாததால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கின்றன. இந்த சூழலில் 2024, 2025 ஆண்டுகளுக்கு படங்களை ஏற்கனவே பல ஓடிடி நிறுவனங்கள் வாங்கி விட்டன.

தயாரிப்பு நிறுவனங்களை பொருத்தவரை தியேட்டர் பிஸினஸை காட்டிலும், மிகப்பெரிய ஒரு தொகை ஓடிடி தளங்கள் மற்றும் சாட்டிலைட் சேனல்கள் உரிமம் மூலம் கிடைத்து வருகிறது. அதனால் அதன் விற்பனையில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த சூழலில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் – கோட் படம் இப்போது ஓடிடி தளத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம்தான் வாங்கியுள்ளது. கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம், ரூ. 160 கோடிக்கு இந்த படத்தை விலைபேசி உள்ளது. ஆனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் விலையை குறைத்து ரூ. 90 கோடிக்கு கேட்டுள்ளது. பிறகு இருதரப்பிலும் பேரம் பேசி கடைசியில் ரூ. 110 கோடிக்கு விலை முடிந்துள்ளது. அதுவும் 2025ம் ஆண்டில் நெட்பிளிக்ஸ்க்கு ஒரே ஒரு படம் மட்டுமே வாங்க வேண்டியிருந்த நிலையில், இப்போது கோட் படத்தை வாங்கி விட்டது.

இதற்கு முன் வெளியான லியோ படம், ஓடிடி தளத்தில் வெளியிட ரூ. 125 கோடிக்கு விற்பனையான நிலையில், அதை விட இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் 15 கோடி ரூபாய் குறைந்துள்ளது. ஆனால், இப்போதைய சூழலில் ஓடிடி நிறுவனங்கள், மிகமிக குறைந்த விலைக்கு படங்களை வாங்க முடிவு செய்துவிட்ட நிலையில், கோட் படம் நல்ல விலைக்கு போயுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவுகிறது.

- Advertisement -

சற்று முன்