தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனை உலகநாயகன் என பாராட்டி மகிழ்ந்தாலும், நடிப்பில் கலைத்துறையில் அவர் சாதனை நாயகன்தான் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் கமல் என்ற மனிதரை பலரும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் சுய ஒழுக்கம் இல்லாத அவரது குடும்ப வாழ்க்கை முறைதான்.
குறிப்பாக 1978ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்த நடன நடிகை வாணிகணபதியை 1988ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். அவர் மனைவியாக இருக்கும்போதே, குஜராத்தி நடிகை சரிகாவுடன் உறவு வைத்திருந்தார். வாணி கணபதியை கழட்டி விட்ட பிறகு, சரிகாவை முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன்.
சரிகாவுடனும் 10 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கமல், 1998ம் ஆண்டில் அவரையும் விட்டு விலகினார். ஆனால் மகள்கள் மட்டும் அப்பா, அம்மா என இருவரிடமும் அன்பு பாராட்டினர்.
அதன்பிறகு 17 ஆண்டுகள் நடிகை கௌதமியுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய கமல், பிறகு அவரையும் பிரிந்து விட்டார். இப்படி 3 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கமல் ஆண்ட்ரியா, சிம்ரன், பூஜாகுமார் போன்றவர்களுடன் நட்பில், உறவில் இருந்ததும், இருப்பதும் தமிழ் சினிமா சார்ந்தவர்களும், ரசிகர்களும் அறிந்த கசப்பான உண்மைகள்தான்.
இப்படிப்பட்ட கமலின் மகள் ஸ்ருதிஹாசன், அப்பனுக்கு தப்பாத புள்ளே என்பது போல, இதுவரை 5 ஆண்களுடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப் குடும்பம் நடத்தியிருக்கிறார். இதில் யாருமே தனக்கு முழுமையான திருப்தி இல்லை என்றும், எப்போது பிரியலாம் என்று கேட்கும் பாய் பிரண்டுதான் எனக்கு வேண்டும் என்றும் கூறி வருகிறார்.
இப்படிப்பட்ட ஒருவருடன், நெருக்கமான காதல் காட்சிகளில் மாஸ் டைரக்டர் நடித்தால் என்னாகும் என்பதை லோகேஷ் கனகராஜ் இப்போதுதான் உணர்ந்திருக்கிறார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். அதை நிரூபிக்கும் விதமாக கமல் மீது தனக்குள்ள விசுவாசத்தை, அன்பை, மரியாதையை காட்டப் போய் தன் கேரியரை நிறைய அவமானங்களை சந்திக்க துவங்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இனிமேல் இசை ஆல்பத்தில் அவர், ஸ்ருதியுடன் நெருக்கமாக நடித்ததை பார்த்து, ஏண்ணா லோகியண்ணா இதெல்லாம் உனக்கு தேவையாண்ணா என, அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். போயும் போயும் நீ ஜோடி சேர ஸ்ருதிஹாசன்தான் கிடைத்தாரா என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர். சூப்பர் ஸ்டாரை வைத்து டைரக்ட் செய்யும் உங்க மாஸ், கெத்தை எல்லாம் இப்படி தவிடு பொடி ஆக்கிட்டீங்களே என்றும் ரசிகர்கள் பலர் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.





