- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த சூப்பர் ஸ்டார் பிரச்னை ஓஞ்சு போச்சு, இந்த சூப்பர் ஸ்டார் பிரச்னை ஸ்டார்ட் ஆகிடுச்சு...

அந்த சூப்பர் ஸ்டார் பிரச்னை ஓஞ்சு போச்சு, இந்த சூப்பர் ஸ்டார் பிரச்னை ஸ்டார்ட் ஆகிடுச்சு – உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்

- Advertisement -

எல்லாத் துறைகளிலும் போட்டி, பொறாமை இருக்கவே செய்கிறது. ஒருவரது வளர்ச்சியை கண்டு மற்ற ஒருவரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இது காலம் காலமாக நடக்கிற விஷயமாக இருந்தாலும் பொஜன பார்வையில் இருப்பதால் சினிமா, அரசியல், கிரிக்கெட் போன்றவற்றில் வெளிப்படையாக தெரிந்து விடுகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வந்துக்கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். நடிப்பில், ஸ்டைலில், திறமையில், வசூலில், மக்களை கவர்கிற விஷயத்தில் என பல அடிப்படைகளில் ரஜினிகாந்தை, 73 வயதான நிலையிலும், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போதும் ஹீரோவாக அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

மக்கள் செல்வாக்கு, வசூல் என்ற அடிப்படையில் தமிழக மக்களின் அபரிமிதமான அன்பை பெற்ற விஜய்தான் இப்போதைக்கு சூப்பர் ஸ்டார் என, கடந்தாண்டு துவக்கத்தில், நடிகர் சரத்குமார் கொளுத்திப் போட, அது கடந்தாண்டு முழுவதும் சமூக வலைதளங்களில் பற்றி எரிந்தது. இதற்கிடையே ரஜினி சொன்ன காக்கா – கழுகு கதையில், காக்கா விஜய், கழுகு ரஜினி என திரித்துவிட, இன்னும் தீ குபுகுபு என பற்றி எரிந்தது.

வளர்ந்துக்கொண்டே போன நிலையில், லியோ பட வெற்றிவிழாவில் பேசிய விஜய், சூப்பர் ஸ்டார் என்றால், அது அவர் மட்டும்தான். நான் என்றுமே தளபதிதான் என அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதுமட்டுமின்றி அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிவிட்டு, சினிமாவை விட்டே விலக முடிவு செய்திருப்பதால் இனி சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் எழுந்துள்ள மற்றொரு சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியதாவது, ரஜினி – விஜய் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓய்ந்து விட்டது. ஆனால் இப்போது நயன்தாரா – திரிஷா இருவரில் யார் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து ஆரம்பித்துள்ளது. முதலில் லேடி சூப்பர் ஸ்டாராக பெயர் பெற்றவர் நயன்தாரா தான். ஆனால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அய்யோ என்னை லேடி சூப்பர் ஸ்டாருன்னு சொல்லாதீங்க, அதுக்கெல்லாம் நான் தகுதியானவள் இல்லை என்றார்.

ஆனால் இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் திரிஷா நடித்த பிறகு, அவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கில் என பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சம்பளமும் 10 கோடி ரூபாய் வரை அதிகாித்துள்ளது. அதே நேரத்தில் அன்னபூரணி படத்துக்கு பிறகு நயன்தாரா மார்க்கெட் சரிந்து விட்டதால், இப்போது திரிஷாதான் லேடி சூப்பர் ஸ்டார் என கோலிவுட் வட்டாரத்தில் கூறுவது, நயன்தாராவுக்கு பயங்கர கடுப்பை கிளப்பியுள்ளது. அதனால் அவர் தனது சம்பளம், தனது லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட்டுத் தராமல், பத்திரிகைகளில் அதை செய்தியாக்கி, விளம்பரப்படுத்தி வருகிறார், என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்