- Advertisement -
Homeபொழுதுபோக்குபல ஆண்டுகளாக தினமும் இரவில் மட்டுமே அதை செய்து வரும் நடிகர் ஜெய், 40 வயதுக்கு...

பல ஆண்டுகளாக தினமும் இரவில் மட்டுமே அதை செய்து வரும் நடிகர் ஜெய், 40 வயதுக்கு பிறகாவது அந்த பழக்கத்தை விடக்கூடாதா? – ஜெய் பிறந்த நாளில் ரசிகர்கள் ஆதங்கம்

- Advertisement -

நடிகர் ஜெய், தமிழ் சினிமா நடிகர்களில் இளமையான அழகான நடிகர். பகவதி என்ற படத்தில் நடிகர் விஜயின் தம்பியாக நடித்து அறிமுகமானார். நடிகர் விஜய் போலவே நடிப்பில் பல உச்சங்களை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ஜெய், இன்னும் புதுமுக நாயகன் போலவே, அதே இடத்தில் இருக்கிறார். இன்னும் லட்சங்களில்தான் சம்பளம் வாங்குகிறார்.

சசிக்குமார் டைரக்ட் செய்த சுப்ரமணியபுரம் படத்தில், அழகர் என்ற கேரக்டரில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தொடர்ந்து எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்க்கும், அஞ்சலிக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனது. படமும் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து சென்னை 28, கலகலப்பு 2, ராஜா ராணி, எனக்கு வாய்த்த அடிமைகள், சரோஜா, கோவா, திருமணம் என்னும் நிக்கா, தீரா காதல் போன்ற பல படங்களில் நடித்தும் ஜெய், பெரிய அளவில் சினிமாவில் முன்னேறவில்லை. இதற்கிடையே முதலில் ஜெய் அஞ்சலியுடனும், அதற்கு பின் நடிகை வாணி போஜனுடனும் கிசுகிசுக்கப்பட்டார். அஞ்சலியுடனும், வாணி போஜனுடனும் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் சில ஆண்டுகள் அவர் வாழ்ந்ததாகவும் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் அருண் காமராஜ் இயக்கிய லேபிள் வெப் சீரிஸில் அட்வகேட் கேரக்டரில் ஜெய் நடிப்பு பேசப்பட்டது. இதே போல கோவித் 19 காலகட்டத்தில், ஜெய் நடித்த வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த போதுதான் அதில் காதலியாக நடித்த வாணி போஜனுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சில ஆண்டுகள் கணவன், மனைவி போல் வாழ்ந்துள்ளனர். பிறகு சினிமா கேரியர் நலன் கருதி இருவரும் மனம் ஒத்து பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் ஜெய் கடைசியாக நடித்து திரைக்கு வந்த படம் அன்னபூரணி. நயன்தாராவின் 75வது படத்தில் நாயகனாக நடித்த ஜெய்க்கு இந்த படமும் கை கொடுக்கவில்லை. இப்போது அறம் படத்தை இயக்கிய நயினார் கோபி இயக்கத்தில் கருப்பர் கூட்டம் என்ற படத்தில் ஜெய் நடித்து வருகிறார். இது நிச்சயம் ஜெய் சினிமா பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நடிகர் ஜெய்க்கு இப்போது 40 வயதாகிறது. இதே நாளில் 1984ல் சென்னையில் பிறந்தவர்தான் ஜெய். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ஜெய் சூரியன் மறைந்த பின், இரவில் ஒரு நேரம் மட்டுமே விரும்பிய உணவை சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார். மற்றபடி பகலில் ஜூஸ், நீராகாரம் மட்டுமே சாப்பிடுகிறார். அவர் ஸ்லிம் ஆக ஸ்மார்ட் ஆக இருக்க அதுதான் காரணமாம். 40 வயதான பிறகும், இப்படி பகல் முழுக்க சாப்பிடாமல் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ள வேண்டுமா, இனியாவது வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுங்கள் என பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள் ஆதங்கமாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்