- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்துல நான் நடித்துள்ள கேரக்டர் - தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் குறித்து...

விஜய் படத்துல நான் நடித்துள்ள கேரக்டர் – தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகர் பிரசாந்த்

- Advertisement -

நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக வலம் வந்தவர். கடந்த 1990களில் வைகாசி பொறந்தாச்சு என்ற படம் மூலம் அறிமுகமான பிரசாந்த், தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள், திருடா திருடா, ஜீன்ஸ், பூ மகள் ஊர்வலம், ஜோடி, நினைத்தேன் வந்தாய், சாக்லேட், குட்லக், கண்ணெதிரே தோன்றினாள் என பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகனாக இருந்தவர்.

இதே நிலையில் அவர் தமிழ் சினிமாவில் நீடித்திருந்தார் விஜய், அஜீத் வரிசையில் இப்போது பிரசாந்த் ஒரு முன்னணி நடிகராக அவர்களுக்கு சமமான ஒரு போட்டி நடிகராக இருந்திருப்பார். ஆனால் அவரது திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் அவரது சினிமா வாழ்க்கையில் திடீரென முடக்கம் ஏற்பட்டு, படங்களில் நடிப்பது நின்று போனது.

- Advertisement -

எனினும் அவரது அப்பா தியாகராஜன், அவரும் 1980களில் மிகப்பெரிய நடிகராக இருந்தவர் என்பதால், தன் மகனை மீண்டும் வில்லனாக அல்லது ஏதேனும் சில கேரக்டர்களில் நடிக்க அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் மகனுக்கான வருமானத்தையும் உருவாக்கவும் அவர் தவறவில்லை.

அந்த வகையில், சென்னை தி நகரில் பிரசாந்த் கோல்டு டவர் என்ற 17 மாடி சொந்த கட்டிடம் பிரசாந்த் பெயரில் உள்ளது. ஜோய் ஆலுக்காஸ் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் அங்கு வாடகைக்கு இருப்பதால், ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இப்போது கூட நடிகர் பிரசாந்த் பிறந்தநாளுக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை அப்பா தியாகராஜன் பரிசளித்து, மகனை மகிழ்ச்சிப்படுத்தினார்.

- Advertisement -

இப்போது, நடிகர் பிரசாந்த் வெங்கட்பிரபு இயக்கத்தில், தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் பிரசாந்த் நடித்திருப்பது அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. ஏனெனில் விஜய், அஜீத்தை போலவே 1990களில் பிரசாந்துக்கு தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ரசிகர்கள் மிக மிக அதிகம்.

சமீபத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்தது குறித்து பேசிய நடிகர் பிரசாந்த், கோட் படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு மிகச் சிறந்த விருந்தாக இருக்கும். இந்த படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் இப்போதே சொல்ல விரும்பவில்லை. ஆனால் மிக வித்யாசமான வேடம். மற்றபடி படம் ரிலீசான பிறகு அதுபற்றி தெரிந்துக்கொள்வீர்கள் என்று கூறியிருக்கிறார் நடிகர் பிரசாந்த்.

- Advertisement -

சற்று முன்