- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷிற்கே விபூதி அடிக்க பார்த்த விஜய் ஆண்டனி, ஆனால் மனுஷன் படு உஷார், இப்படி எல்லாம்...

தனுஷிற்கே விபூதி அடிக்க பார்த்த விஜய் ஆண்டனி, ஆனால் மனுஷன் படு உஷார், இப்படி எல்லாம் நடந்திருக்கா?

- Advertisement -

90’ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக இருக்கும் விஜய் ஆண்டனி, தற்போது “கொலை”, “மழை பிடிக்காத மனிதன்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்தில் நடிப்பதில் ஆர்வம் கொண்டார். அவ்வாறு “நான்” திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து “சலீம்”, “பிச்சைக்காரன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

விஜய் ஆண்டனி முறையாக இசை கற்காதவர். ஆனால் சிறு வயதிலேயே இசையின் மீது அவருக்கு தீவிர ஈடுபாடு இருந்தது. ஆதலால் தானாகவே டியூன் போட பழகிக்கொண்டார். விஜய் ஆண்டனி சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு பல பக்தி பாடல்களுக்கு மியூசிஸியனாக இருந்திருக்கிறார்.

- Advertisement -

அந்த சமயத்தில் பல தனி ஆல்பங்களையும் இசையமைத்து வந்திருக்கிறார். அப்போதுதான் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்துக்கு ஒரு தனி ஆல்பம் இசையமைத்து தந்தாராம். லதா ரஜினிகாந்த் விஜய் ஆண்டனி ஸ்டுடியோவுக்கு வரும்போதெல்லாம் அவ்வப்போது தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அழைத்து வருவாராம்.

அப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் விஜய் ஆண்டனிக்கு நல்ல நட்பு ஏற்பட்டதாம். சில வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை, ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து “இவர்தான் என்னுடைய கணவர்” என்று விஜய் ஆண்டனிக்கு அறிமுகப்படுத்தினாராம்.

- Advertisement -

தனுஷிற்கு இசையில் ஆர்வம் இருப்பதாகவும் அவருக்கு தேவையான சில டியூன்களை வடிவமைத்து தருமாறும் ஐஸ்வர்யா கூறினாராம். அதற்கு விஜய் ஆண்டனியும் ஒப்புக்கொண்டாராம். தனக்கு முழுமையான இசை ஞானம் இல்லை என்றாலும் தனுஷை எப்படியாவது ஏமாற்றி சமாளித்து விடலாம் என்று நினைத்தாராம். ஆனால் தனுஷிற்கு விஜய் ஆண்டனியை விட நல்ல இசை ஞானம் இருந்ததாம். ஆதலால் விஜய் ஆண்டனிக்கு பல்பு ஆகிவிட்டதாம். அதன் பின் 4 நாட்களில் தனுஷிற்கு தேவையான ஒரு ட்யூனை வடிவமைத்துக்கொடுத்து அவரை அனுப்பி வைத்தாராம்.

- Advertisement -

சற்று முன்