நடிகர் விஜய், அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கொரட்டூரில், சாய்பாபாவின் தீவிர பக்தையான தனது அம்மா ஷோபாசந்திரசேகருக்காக, சீரடி சாய்பாபா கோவிலை கட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்துள்ளது. இந்த விழாவில் நடிகர் விஜய், அவரது தாய் ஷோபா சந்திரசேகர், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நடிகர் விஜய் இப்போது ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில், கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற 17-ம் தேதி, படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, படக் குழு சென்னைக்கு திரும்புகிறது.
நடிகர் விஜய் தனது அம்மா ஷோபா சந்திரசேகர் விருப்பத்தை கேட்டு, அவருக்காக தனது சொந்த இடத்தில் கொரட்டூரில் மிகப் பிரமாண்டமான சீரடி சாய்பாபா கோவிலை கட்டியுள்ளார். அந்த கோவிலில் ஷோபா சந்திரசேகர் சுவாமி தரிசனம் செய்யும் காட்சிகள், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
முதலில் விஜய் தனக்கு சொந்தமான உதயம் தியேட்டர் அருகில் உள்ள இடத்தில் தான் இந்த கோவிலைக் கட்டுவதாக தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடப்பதால், அங்கு கோவிலை கட்டுவது சரியாக இருக்காது, பக்தர்கள் வருகை பாதிக்கப்படும் என்பதால் கொரட்டூரில் விஜய்க்கு சொந்தமான மற்றொரு இடத்தில் இந்த கோவில் மிக சிறப்பான முறையில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கோவிலுக்கு ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் தீவிர பக்தரான நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் திடீரென விசிட் செய்துள்ளார். கோவில் வாசலில் காத்திருந்து அவரை வரவேற்ற நடிகர் ஷோபா சந்திரசேகர், அவரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். கோவிலில் ஒவ்வொரு இடமாக சென்று சுவாமி தரிசனம் செய்து இறைவனை வழிபட்ட நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் மரியாதை செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இந்த காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது, விஜய் கட்டிய கோவிலுக்கு ராகவா லாரன்ஸ் சென்றதும், விஜயின் அம்மா வரவேற்ற அந்த காட்சிகளும் வைரலாகி, விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ராகவா லாரன்ஸ் தன் அம்மாவுக்காக, அவரையே வழிபடும் கோவிலை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/C5sOo9kx9MJ/?igsh=MWgwZGJrbDZlenVlbQ%3D%3D





