- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்திற்கு வில்லனாகும் ஆக்ரோஷ நடிகர்... குட் பேட் அக்லியில் பேட் வில்லன் இவர் தானா...

அஜித்திற்கு வில்லனாகும் ஆக்ரோஷ நடிகர்… குட் பேட் அக்லியில் பேட் வில்லன் இவர் தானா…

- Advertisement -

அஜித் குமார் தற்போது நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் 60% படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது. திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் த்ரில்லராக இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி எடுத்து வருகிறார். அதாவது காரில் பயணம் மேற்கொள்ளும் ஹீரோ, ஒரு கட்டத்தில் தனது மனைவியை தொலைக்க, அதற்குப் பின் நடைபெறும் ஆச்சரியம் கலந்த காட்சிகள் தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த திரைப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா இதுவரை வெளியிடவில்லை. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அஜித் வேகமாக காரை ஓட்ட, ஒரு கட்டத்தில் அது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சியாக இருந்தது.

சூட்டிங்கின் போது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அஜித்துடன் பயணித்த ஆரவ்வும் நல்வாய்ப்பாக இதில் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோவை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு விடாமுயற்சி திரைப்படத்தின் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்தத் திரைப்படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இதற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவிஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஜூன் மாதம் இதன் படபிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் படத்தில் பிற நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மே ஒன்றாம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் அனிமல் திரைப்படத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இதே போல் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடித்துள்ளார். இப்படியான சூழலில் இவர் அஜித் படத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூட்டி உள்ளது.

- Advertisement -

சற்று முன்